வியாழக்கிழமை 27 ஜூன் 2019

நிஸான் இந்தியா தலைவராக சினன் ஓஸ்கோக் நியமனம்  

DIN | Published: 11th June 2019 01:47 AM

ஜப்பானைச் சேர்ந்த நிஸான் நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளுக்கான தலைவராக சினன் ஓஸ்கோக் (49) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
 இந்தியாவில் நிஸான் மற்றும் டாட்ஸன் பிராண்டுகளின் வாகன தயாரிப்பு, விற்பனை, சந்தைப்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய அனைத்து செயல்பாடுகளுக்கும் ஓஸ்கோக் தலைவராக இருப்பார் என்று அந்த அறிக்கையில் நிஸான் தெரிவித்துள்ளது. துருக்கியில் உள்ள நிஸான் நிறுவனத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் நிர்வாக இயக்குநர் பொறுப்பை வகித்து வந்த ஓஸ்கோக், தாமஸ் குயெலுக்கு பதிலாக தற்போது இந்திய செயல்பாடுகளுக்கான பொறுப்பை ஏற்கவுள்ளார்.
 கடந்த 1993-இல் ரெனோ நிறுவனத்தில் பணியை தொடங்கிய ஓஸ்கோக், சந்தைப்படுத்துதல், விநியோக நெட்வொர்க் மேலாண்மை, ரீடெயில் ஆபரேஷன் மற்றும் விற்பனை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். நிஸான் நிறுவனத்தில் கடந்த 2015-இல் இணைந்தார்.
 ஜப்பானில் யோகோஹாமாவில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கி வரும் நிஸான் நிறுவனம், டாட்ஸன், இன்ஃபினிட்டி, நிஸான் பிராண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட மாடல்களில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
 கடந்த 2018-இல் இந்நிறுவனம் சர்வதேச அளவில் 55.20 லட்சம் வாகனங்களை விற்பனை செய்ததன் மூலம் 11.6 லட்சம் கோடி யென்னை வருவாயாக ஈட்டியது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சரிவைக் கண்ட காபி ஏற்றுமதி
பங்குச் சந்தைகளில் ஏறுமுகம்: சென்செக்ஸ் 312 புள்ளிகள் அதிகரிப்பு
ஃபியட் கிறிஸ்லரின் புதிய மேம்படுத்தப்பட்ட ஜீப் ரகம் அறிமுகம்
தொலைத் தொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை 118.38 கோடியாக உயர்வு
வங்கிகள் குறித்து புகார் தெரிவிக்க வேண்டுமா..? ரிசர்வ் வங்கி இணையதளத்தில் புதிய வசதி