திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

30 சதவீதம் சந்தைப் பங்கை பிடிக்க ரோகோ நிறுவனம் இலக்கு

DIN | Published: 09th June 2019 12:46 AM

ஸ்பானிஸ் சானிட்டரிவேர் (பாத்ரூம் பொருள்கள்) தயாரிக்கும் ரோகோ நிறுவனம், சிபிவிசி( குளோரினேடட் பாலிவினைல் குளோரைடு)-பைப்புகளுக்கான 30 சதவீதம் சந்தை பங்கை பிடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
 இது குறித்து ரோகோ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.இ. ரங்கநாதன் கூறியது: மதுரை மற்றும் தூத்துக்குடியில் வீட்டு பிளம்பிக் பைப்புகளுக்காக பேரிவேர் சிபிவிசி பைப்புகள் 2018-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
 தொடக்கத்தில், பாத்ரூம் தீர்வுக்கான பொருள்களுக்கு வரவேற்பு குறைவாக இருந்தது. தற்போது விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது முழு ஆண்டுக்கு ஆர்டர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 மதுரையில் கடந்த 4 மாதங்களில் 10 சதவீதம் சந்தை பங்கை ரோகோ நிறுவனம் பெற்றது. இதை பின்பற்றி, திருச்சி, கோயம்புத்தூரில் தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளோம். சென்னை சந்தை கணக்கு ரூ.150 கோடி ஆகும். இரண்டு ஆண்டுகளில் 30 சதவீதம் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தென் இந்தியாவில் கவனம் செலுத்துகிறோம்.
 ரோகோ நிறுவனம் 2018-ஆம் ஆண்டில் ரூ.1,100 கோடி வருவாய் ஈட்டியது. நிகழாண்டில் ரூ.1,300 கோடியை எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு 20 சதவீதம் உயர்கிறது. வளர்ச்சி விகிதம் நன்றாக உள்ளது. நடப்பு ஆண்டில் முதல் 6 மாதத்தில் ரூ.650 கோடி ஈட்டப்பட்டுள்ளது என்றார் அவர்.
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஜவுளி ஏற்றுமதியில் மந்த நிலை
நலிவடைந்து வரும் முந்திரி வர்த்தகம்
கசக்கும் கரும்பு விவசாய தொழில்
தங்கம் விலை பவுன் ரூ.28,672
அந்நியச் செலாவணி கையிருப்பில் 100 கோடி டாலர் அதிகரிப்பு