புதன்கிழமை 19 ஜூன் 2019

டிவி விற்பனையில் 34% சந்தை பங்களிப்பு: சாம்சங் இலக்கு

DIN | Published: 05th June 2019 01:01 AM


சாம்சங் இந்தியா நிறுவனம் டிவி விற்பனையில் அதன் பங்களிப்பை 34 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் ராஜு புல்லான் பிடிஐ செய்தியாளரிடம் தெரிவித்ததாவது:
 சந்தையில் கியூஎல்இடி டிவிக்களுக்கு வாடிக்கையாளர்களிடையே வரவேற்பு பெருகி வருகிறது. இதையடுத்து,  நடப்பாண்டில் அதன் விற்பனை மூன்று மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தவிர, சாம்சங் பெரிய திரை பிரிவில் மூன்று கியூஎல்இடி 8கே டிவிக்களை, ரூ.10.99 லட்சம் (75 அங்குலம்) மற்றும் ரூ.16.99 லட்சம் (82 அங்குலம்) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதைத்தவிர, 98 அங்குல திரை கொண்ட கியூஎல்இடி 8கே டிவிக்களை நிறுவனம் முன்கூட்டிய ஆர்டர்களின் பேரில் தயாரித்து வருகிறது.
65 அங்குல திரையுடைய டிவியின் விலை விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. 
இவைதவிர, 12 கியூஎல்இடி 4கே டிவிக்களை சாம்சங் அண்மையில்தான் அறிமுகப்படுத்தியது.
தற்போதைய நிலையில், டிவி சந்தையில் நிறுவனத்தின் பங்களிப்பு 30 சதவீத அளவுக்கே உள்ளது. இந்த நிலையில், இதுபோன்ற புதிய அறிமுகங்களின் உதவியால், வரும் அக்டோபர்-நவம்பர் பண்டிகை காலங்களில் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பை 34 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

5 ஆண்டுகளில் ஜவுளி உற்பத்தியில் காதியின் பங்களிப்பு இருமடங்காக உயர்வு
சென்செக்ஸ் 85 புள்ளிகள் அதிகரிப்பு
வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரின் பதவிக்காலம் நீட்டிப்பு
அமெரிக்கா-இந்தியா வர்த்தக மோதல் எதிரொலி! பங்குச் சந்தையில் கடும் சரிவு
ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திலிருந்து வெளியேறியது பிராமல் எண்டர்பிரைசஸ்