வர்த்தகம்

ஈ.ஐ.டி பாரி இந்தியா வருவாய் ரூ.3,126 கோடி

30th Jul 2019 12:59 AM

ADVERTISEMENT


முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த ஈ.ஐ.டி. பாரி இந்தியா நிறுவனம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.3,126 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2018-19 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நிறுவனம் ஒட்டுமொத்த அளவில்  ரூ.3,363 கோடி வருவாய் ஈட்டியிருந்தது. இந்த நிலையில் ,நடப்பாண்டில் இதே கால அளவில் வருவாய் 7 சதவீதம் குறைந்து ரூ.3,126 கோடியாகி உள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ.83 கோடியிலிருந்து 125 சதவீதம் அதிகரித்து ரூ.187 கோடியானது.
நடப்பு நிதியாண்டின்  ஜூன் காலாண்டில் நிறுவனம் ரூ.28 கோடியை வரிக்கு பிந்தைய இழப்பாக கண்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் ரூ.195 கோடியாக காணப்பட்டது.
ஈ.ஐ.டி. பாரியின் தனிப்பட்ட வருவாய் ஜூன் காலாண்டில் ரூ.456 கோடியிலிருந்து சரிந்து ரூ.388 கோடியாகி உள்ளது. வரிக்கு முன்பு ஏற்பட்ட இழப்பு ரூ.103 கோடியிலிருந்து குறைந்து ரூ.31 கோடியாகி உள்ளது. 
கடந்த நிதியாண்டில் ஜூன் காலாண்டில்  சர்க்கரைப் பிரிவில் ரூ.180 கோடியாக காணப்பட்ட செயல்பாட்டு இழப்பு நடப்பு நிதியாண்டில் இதே கால அளவில் ரூ.53 கோடியாக குறைந்துள்ளது.
விவசாய இடுபொருள் பிரிவிலிருந்து கிடைக்கும் செயல்பாட்டு லாபம் ரூ.229 கோடியிலிருந்து குறைந்து ரூ.208 கோடியாகி உள்ளது என அந்த செய்திக்குறிப்பில் ஈ.ஐ.டி. பாரி தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT