எல்லாம் டிஜிட்டல் மயம்!

உள்நாட்டில் ரொக்கப் பரிவர்த்தனையை குறைத்து மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
எல்லாம் டிஜிட்டல் மயம்!


உள்நாட்டில் ரொக்கப் பரிவர்த்தனையை குறைத்து மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பொதுமக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்கும் வகையில் அதற்கு பல்வேறு ஊக்குவிப்பு சலுகைகளையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. 

அதிக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.  டிஜிட்டல்  முறையை பயன்படுத்தி பரிவர்த்தனைகள் மேற்கொள்வதில் ஏனைய மாநிலங்களை காட்டிலும் தமிழகம் சிறப்பான வளர்ச்சியை பெற்று வருகிறது. குறிப்பாக, கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு நகரங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிக அளவில் நடைபெறுவதாக ரேஸர்பே  நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ள மேலும் முக்கியமான அம்சங்கள் பின்வருமாறு:

சென்னை 

    2019-ஆம் ஆண்டு முதல் காலாண்டில் டிஜிட்டல் பேமண்ட் வசதிகளை அதிக அளவு செய்து கொடுக்கும் இந்திய நகரங்களில் சென்னைக்கு 6-ஆவது இடம். 

    டிஜிட்டல் பரிவர்த்தனையில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் பங்கு 55 சதவீதமாகவும், நெட் பேங்கிங் 24 சதவீதமாகவும், யுபிஐ 20 சதவீத பங்கையும் கொண்டுள்ளது.

    முந்தைய காலாண்டை விட ஜனவரி-மார்ச் காலாண்டில் யுபிஐ பரிவர்த்தனை 57% வளர்ச்சி. குறிப்பாக, கூகுள் பே-யில் யுபிஐ முறையில் பணம் செலுத்துவோரின் பங்களிப்பு 72 சதவீதமாக உள்ளது. 

இந்தியா

    இந்தியாவைப் பொருத்தவரையில் அதிக டிஜிட்டல்மயமாக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, ஹைதராபாத், மும்பை, புணே, தில்லி நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

    மாநிலங்களைப் பொருத்தவரையில்  முதல் ஐந்து இடங்களில் , கர்நாடகம், மகாராஷ்டிரம், தில்லி, தமிழகம் மற்றும் ஆந்திரம் இடம்பெற்றுள்ளன.

    டிஜிட்டல் பேமண்ட் செலுத்தும் முறையில் கிரெடிட்-டெபிட் கார்டுகளின் பங்களிப்பு 50 %, யுபிஐ 34%, நெட் பேங்கிங் 13%. 

    கூகுள் பே-தொடர்ந்து அனைவரும் விரும்பும் யுபிஐ செயலியாக உள்ளது. அதன் பங்களிப்பு 57%. 

    டிஜிட்டல் பேமண்டில் போன்பே 26% வளர்ச்சியை பெற்றுள்ளது. அதேசமயம்,  பீம் 8%, பேடிஎம் 7% ஆகிய செயலிகளின் பங்களிப்பு யுபிஐ-யில் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    தேசிய அளவில் டிஜிட்டல் பேமண்ட் வளர்ச்சியில் உணவு & பானம்  (29%), விளையாட்டு (15%), நிதி சேவைகள் (14%) ஆகிய 3 துறைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. 

    வாலெட்டுகளில் பணத்தை மாற்றிக் கொள்வது 19% வளர்ச்சியை கண்டுள்ளது. இதில், ஓலா மணி அதிக பங்களிப்பை கொண்டுள்ளது.

கணிப்பு

வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் 40 சதவீத டிஜிட்டல் பேமண்ட் பரிவர்த்தனைகள் இரண்டாம் அடுக்கு நகரங்களில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோரிடையே நடைபெறும். டிஜிட்டல் பேமண்ட் பரிவர்த்தனைகளை விரிவுபடுத்திட மத்திய அரசு சார்பில் மேலும் பல புதிய ஊக்குவிப்பு சலுகைகள் அறிமுகப்படுத்தப்படும். வரும் 2021-க்குள் மொபைல் வழியாக பணம் செலுத்தும் முறை 10 மடங்கு அதிகரிக்கும் என ரேஸர்பே  கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com