அந்நியச் செலாவணி கையிருப்பு 111 கோடி டாலர் சரிவு

வரலாற்று உச்சத்தை எட்டியிருந்த அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 12-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 111 கோடி டாலர் சரிவடைந்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 111 கோடி டாலர் சரிவு

வரலாற்று உச்சத்தை எட்டியிருந்த அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 12-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 111 கோடி டாலர் சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ந்நியச் செலாவணி சொத்து மதிப்பு குறைந்து போனதையடுத்து, ஜூலை 12-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 111 கோடி டாலர் சரிந்து (ரூ.7,659 கோடி) 42,879 கோடி டாலரானது (ரூ.29.58 லட்சம் கோடி). நான்கு வார தொடர் ஏற்றத்துக்குப் பிறகு அந்நியச் செலாவணி கையிருப்பு திடீரென சரிவைக் கண்டது இதுவே முதல் முறை.

இதற்கு முந்தைய வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 223 கோடி டாலர் உயர்ந்து  42,990 கோடி டாலராக காணப்பட்டது. கணக்கீட்டு வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கியமான பங்களிப்பாக கருதப்படும் அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 111 கோடி டாலர் குறைந்து 39,969 கோடி டாலராக காணப்பட்டது. தங்கத்தின் விலை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள போதிலும், நாட்டின் தங்க கையிருப்பு மாற்றம் எதுவுமில்லாமல் 2,430 கோடி டாலர் என்ற அளவிலேயே இருந்தது.

சர்வதேச நிதியத்தில் எஸ்டீஆர் இருப்பு 12 லட்சம் டாலர் குறைந்து 145 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலையும் 15 லட்சம் டாலர் சரிந்து 334 கோடி டாலராகவும் காணப்பட்டது என புள்ளிவிவரத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com