ரூ.27 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம்

ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.27 ஆயிரத்தை நெருங்குகிறது.  சென்னையில் வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.248 உயர்ந்து, ரூ.26,904-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ரூ.27 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம்

ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.27 ஆயிரத்தை நெருங்குகிறது.  சென்னையில் வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.248 உயர்ந்து, ரூ.26,904-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் கடந்த மாதம் முதலே  தங்கம் விலை உயர்ந்து வந்தநிலையில், கடந்த 11-ஆம் தேதி பவுன்  ரூ.26,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு, ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது.

இதற்கிடையில், கடந்த வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டது. பவுனுக்கு ரூ.304 உயர்ந்து, ரூ.26,656-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை உயர்வுக்கு அமெரிக்காவில் ஃபெடரல் வங்கி கூட்டமைப்பு வைப்பு நிதியின் வட்டியை உயர்த்தாததால்,  முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்து வருவது முக்கிய காரணம் என்று தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தனர். 

இந்நிலையில்,  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.27 ஆயிரத்தை நெருங்குகிறது. வெள்ளிக்கிழமை  பவுனுக்கு ரூ.248 உயர்ந்து, ரூ.26,904-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.31 உயர்ந்து, ரூ.3,363-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 80 பைசா உயர்ந்து, ரூ.44.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.800 அதிகரித்து, ரூ.44,600 ஆகவும் இருந்தது.
வெள்ளிக்கிழமை விலை

ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் .............    3,363
1 பவுன் தங்கம் ............. 26,904
1 கிராம் வெள்ளி ..........     44.60
1 கிலோ வெள்ளி .........   44,600

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் .............    3,332
1 பவுன் தங்கம் ............. 26,656
1 கிராம் வெள்ளி ..........     43.80
1 கிலோ வெள்ளி .......... 43,800

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com