சென்செக்ஸ் 160 புள்ளிகள் அதிகரிப்பு

சாதகமான பொருளாதார புள்ளிவிவரங்களால் மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
சென்செக்ஸ் 160 புள்ளிகள் அதிகரிப்பு


சாதகமான பொருளாதார புள்ளிவிவரங்களால் மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. 
சர்வதேச வர்த்தகத்தில் நிலவிய  சாதகமான சூழல், மருந்து, உலோகத் துறையைச் சேர்ந்த சில நிறுவனங்கள் வெளியிட்ட சிறப்பான நிதி நிலை முடிவுகள் உள்ளிட்டவை பங்கு சந்தை முதலீட்டாளர்களிடையே நேர்மறை எண்ணங்களை உருவாக்கின.
மேலும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் சந்தை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் இருந்ததால் முதலீட்டாளர்கள் தேசிய பங்குச் சந்தையில் தொழில்நுட்பத் துறை பங்குகளை போட்டிபோட்டு வாங்கியது நிஃப்டி ஏற்றத்துக்கு வழிவகுத்தது.
இதனிடையே, நாட்டின் பணவீக்கம் 23 மாதங்களில் இல்லாத வகையில் 2.02 சதவீதமாக குறைந்துள்ளது என்ற செய்தியும் பங்கு சந்தையின் ஏற்றத்துக்கு வலு சேர்த்தது.
இன்ஃபோசிஸ் பங்கின் விலை 7.20 சதவீதம் உயர்ந்தது. டிசிஎஸ் நிறுவன பங்குகளின் விலை 1.77 சதவீதமும், டெக் மஹிந்திரா 1.73 சதவீதமும், ஹெச்சிஎல் டெக் 0.24 சதவீதமும் அதிகரித்தன.
அதேசமயம், இன்டஸ்இண்ட் வங்கி, எல் அண்டு டி, ஐடிசி, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி, எஸ்பிஐ, ஹீரோ மோட்டோகார்ப் பங்குகளின் விலை 2.28 சதவீதம் வரை இழப்பைக் கண்டன. 
திவான் ஹவுஸிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் மிகப் பெரிய இழப்பை சந்தித்ததையடுத்து அந்நிறுவனப் பங்கின் விலை 29.15 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 160 புள்ளிகள் அதிகரித்து 38,896 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 35 புள்ளிகள் உயர்ந்து 11,588 புள்ளிகளாக நிலைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com