செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

டாடா மோட்டார்ஸ் சர்வதேச வாகன விற்பனை 5% சரிவு

DIN | Published: 12th July 2019 01:05 AM


டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜூன் மாத விற்பனை 5 சதவீத சரிவைக் கண்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஜாகுவர் லேண்டு ரோவர் உள்ளிட்ட டாடா மோட்டார்ஸின் சர்வதேச வாகன விற்பனை சென்ற ஜூன் மாதத்தில் 95,503-ஆக இருந்தது. இது, முந்தைய ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 1,00,135 கார்களுடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் குறைவாகும்.
டாடா டேவூ உள்ளிட்ட நிறுவனத்தின் வணிக வாகனங்கள் விற்பனை 44,229 என்ற எண்ணிக்கையிலிருந்து 12 சதவீதம் சரிந்து 38,846-ஆனது. 
சர்வதேச பயணிகள் வாகன விற்பனை 55,906-லிருந்து 1 சதவீதம் மட்டுமே உயர்ந்து 56,657-ஆனது.  ஜேஎல்ஆர் சர்வதேச விற்பனை 43,204-ஆக இருந்தது. இதில் ஜாகுவார் மொத்த விற்பனை 12,839-ஆகவும், லேண்ட் ரோவர் விற்பனை 30,365-ஆகவும் இருந்தது.
ஜேஎல்ஆர் விற்பனை 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 37,490-ஆக இருந்தது என அந்த அறிக்கையில் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நாட்டின் ஏற்றுமதி 9.71 சதவீதம் சரிவு
பணவீக்கம் 2.02 சதவீதமாக குறைந்தது
சென்செக்ஸ் 160 புள்ளிகள் அதிகரிப்பு
ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் கடன்பத்திர வெளியீடு ஜூலை 17-இல் தொடக்கம்
பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் லாபம் ரூ.56 கோடி