வர்த்தகம்

பங்குச் சந்தையில் எழுச்சி: சென்செக்ஸ் 291 புள்ளிகள் அதிகரிப்பு

2nd Jul 2019 12:44 AM

ADVERTISEMENT


 சர்வதேச அளவில் காணப்பட்ட சாதகமான நிலவரங்களால் இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக மோதல்களுக்கு சுமுக தீர்வு காண இருநாடுகளும் ஒப்புக் கொண்டது சர்வதேச முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரும் ஆறுதலாக அமைந்தது. அதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது.
மேலும், ஓபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை தேவையான அளவுக்கு உற்பத்தி செய்யும் என்ற நிலைப்பாடு, ஜிஎஸ்டி வரி விகிதம் எளிமைப்படுத்தும் திட்டம் வரி வருவாயை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவையும் பங்குச் சந்தைகளின் ஏற்றத்துக்கு பக்கபலமாக இருந்தது.
டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஹெச்டிஎஃப்சி, இன்டஸ்இண்ட் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலை 3.23 சதவீதம் வரை அதிகரித்தது.
அதேசமயம், ஓஎன்ஜிசி, ஹெச்சிஎல் டெக், மாருதி சுஸுகி, ஹெச்யுஎல் பங்குகளின் விலை 3.99 சதவீதம் வரை சரிவை சந்தித்தது. 
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 291 புள்ளிகள் அதிகரித்து 39,686 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 76 புள்ளிகள் உயர்ந்து 11,865 புள்ளிகளாக நிலைத்தது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT