வர்த்தகம்

ஏர்டெல்லுடன் முழுமையாக இணைந்தது டாடா டெலிசர்வீசஸ்

2nd Jul 2019 12:45 AM

ADVERTISEMENT


டாடா டெலிசர்வீசஸின் நுகர்வோர் மொபைல் வர்த்தகத்தை பார்தி ஏர்டெல் நிறுவனம் முழுமையாக கையகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த இரண்டு நிறுவனங்களும் திங்கள்கிழமை கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: டாடா டெலிசர்வீசஸ் (டிடிஎஸ்எல்) மற்றும் டாடா டெலிசர்வீசஸ் மகாராஷ்டிரம் (டிடிஎம்எல்) செல்லிடப்பேசி வர்த்தகத்தை பார்தி ஏர்டெல் மற்றும் பார்தி ஹெக்ஸாகாம் (ஏர்டெல்) ஆகியவற்றுடன் இணைக்கும் நடவடிக்கை திங்கள்கிழமை முழுமையாக நிறைவடைந்தது.
இதையடுத்து, டிடிஎஸ்எல் மற்றும் டிடிஎம்எல் ஆகியவற்றுக்குச் சொந்தமான அனைத்து வாடிக்கையாளர்கள், சொத்துகள், அலைக்கற்றை உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளும் ஏர்டெல் வசம் வந்துள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
ஏர்டெல் நிறுவனம் டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்தை இணைத்துக் கொண்டதையடுத்து அதற்கு சொந்தமான 19 தொலைத்தொடர்பு வட்டங்களில் உள்ள செயல்பாடுகள் அனைத்தும் ஏர்டெல்லுக்கு சொந்தமாகியுள்ளது. இந்த இணைப்பின் மூலம் ஏர்டெல் நிறுவனத்திடம் உள்ள அலைகற்றை கையிருப்பு மேலும் வலுவடையும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT