நிஸான் நிறுவனம் சொகுசு வகையைச் சேர்ந்த கிக்ஸ் காரை இந்திய சந்தைகளில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து நிஸான் இந்தியாவின் தலைவர் தாமஸ் குயெல் கூறியதாவது:
எஸ்யுவி மாடல் கிக்ஸ் கார் இந்திய சந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. இதில், 1.5 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் விதிமுறைகளின்படி, இப்புதிய மாடல் பெட்ரோல் ரக கார் லிட்டருக்கு 14.23 கிலோ மீட்டர் வரையிலும், டீசல் ரக கார் லிட்டருக்கு 20.45 கிலோ மீட்டர் வரையிலும் மைலேஜ் தரும்.
கிக்ஸ் கார்களின் விலை மாடலுக்கு ஏற்ப ரூ.9.55 லட்சம் முதல் ரூ.14.65 லட்சம் வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நிஸான் நிறுவனத்தின் மின்சார காரான லீஃப் இந்தியாவில் இந்தாண்டு அறிமுகப்படுத்தப்படும் என்றார் அவர்.