வெள்ளிக்கிழமை 19 ஏப்ரல் 2019

பயணிகள் வாகன விற்பனையில் தொய்வு நிலை

DIN | Published: 15th January 2019 12:59 AM


பயணிகள் வாகன விற்பனை டிசம்பர் மாதத்தில் லேசான தொய்வு நிலையைக் கண்டுள்ளது. 
இதுகுறித்து இந்திய மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த டிசம்பரில் 2,38,692 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. 2017 டிசம்பரில் விற்பனையான 2,39,723 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது சற்று குறைவானதாகும். 
2017-இல் 32,30,614 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்தாண்டில் விற்பனை 0.58 சதவீதம் அதிகரித்து 33,94,756-ஆக காணப்பட்டது. 
உள்நாட்டில் கார் விற்பனை டிசம்பர் மாதத்தில் 2.01 சதவீதம் குறைந்து 1,55,159-ஆக இருந்தது. 2017 டிசம்பரில் கார் விற்பனை 1,58,338-ஆக காணப்பட்டது.
அதேசமயம், மோட்டார் சைக்கிள் விற்பனை டிசம்பரில் 7,88,334 என்ற எண்ணிக்கையிலிருந்து சற்று அதிகரித்து 7,93,061-ஆக இருந்தது.
ஆனால் ஒட்டுமொத்த இருசக்கர வாகன விற்பனை டிசம்பரில் 12,87,766-லிருந்து 2.23 சதவீதம் சரிவைடந்து 12,59,026-ஆக காணப்பட்டது.
வர்த்தக வாகனங்கள் விற்பனையும் டிசம்பரில் 7.8 சதவீதம் குறைந்து 75,984-ஆக இருந்தது.
அனைத்து பிரிவைச் சேர்ந்த வாகனங்களின் விற்பனை டிசம்பரில் 2.97 சதவீதம் சரிந்து 16,66,878 என்ற எண்ணிக்கையிலிருந்து 16,17,356-ஆகியுள்ளது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிகர லாபம் ரூ.10,362 கோடி
தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 120.5 கோடி
நடுத்தரவகை சொகுசுகாரை இணைந்து மேம்படுத்த மஹிந்திரா-ஃபோர்டு நிறுவனங்கள் உடன்படிக்கை
சென்செக்ஸ் 135 புள்ளிகள் இழப்பு
நிதி நெருக்கடி: விமான சேவையை  தற்காலிகமாக நிறுத்தியது ஜெட் ஏர்வேஸ்