சனிக்கிழமை 20 ஜூலை 2019

நாட்டின் பணவீக்கம் 3.80 சதவீதமாக சரிவு

DIN | Published: 15th January 2019 12:57 AM


நாட்டின் பணவீக்கம் சென்ற டிசம்பர் மாதத்தில் 3.80 சதவீதமாக சரிவைக் கண்டுள்ளது. 
இதுகுறித்து மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
மொத்தவிற்பனை விலை குறியீட்டெண் (டபிள்யூபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 3.80 சதவீதமாக சரிந்துள்ளது. இது, 8 மாதங்களில் காணப்படாத குறைந்தபட்ச அளவாகும்.
இப்பணவீக்கம் 2017-ஆம் ஆண்டு டிசம்பரில் 3.58 சதவீதமாகவும், 2018 நவம்பர் மாதத்தில் 4.64 சதவீதமாகவும் காணப்பட்டன.
எரிபொருள்கள் மற்றும் உணவுப் பொருள்களின் விலை கட்டுக்குள் இருந்ததையடுத்து பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் இந்த அளவுக்கு குறைந்துள்ளது. 
2018 நவம்பரில் 3.31 சதவீதமாக காணப்பட்ட உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் டிசம்பரில் 0.07 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. அதேபோன்று, காய்கறிகளின் விலை 26.98 சதவீதமாக அதிகரித்திருந்த நிலையில், டிசம்பரில் இது 17.55 சதவீதம் அளவுக்கு குறைந்துபோனது.
மேலும், எரிபொருள்களுக்கான பணவீக்கம் கடந்த நவம்பரில் 16.28 சதவீதம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், டிசம்பரில் அது பாதியாக குறைந்து 8.38 சதவீதமாக இருந்தது. தனிப்பட்ட முறையில், பெட்ரோல், டீசலுக்கான பணவீக்கம் 8.61 சதவீதத்திலிருந்து சரிந்து 1.57 சதவீதமாக காணப்பட்டது. டிசம்பரில், சமையல் எரிவாயுவிற்கான பணவீக்கம் 6.87 சதவீதம் என்ற அளவில் இருந்தது. உணவுப் பொருள்களைப் பொருத்தவரையில் உருளைக்கிழங்கிற்கான பணவீக்கம் 86.45 சதவீதத்திலிருந்து வீழ்ச்சியடைந்து 48.68 சதவீதமாக காணப்பட்டது. 
கடந்த நவம்பரில் வெங்காயத்தின் விலை 47.60 சதவீதம் உயர்ந்திருந்த நிலையில், டிசம்பரில் அது 63.83 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது. 
கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 3.62 சதவீதமாக இருந்தது. ஆனால், அதற்கு பிறகு 8 மாதங்கள் கழித்து டிசம்பரில் தான் பணவீக்கமானது இந்த அளவுக்கு குறைந்துள்ளது என மத்திய அரசு புள்ளிவிவரத்தில் கூறியுள்ளது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ரூ.27 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம்
ஏர்டெல்லை பின்னுக்குத் தள்ளி  ரிலையன்ஸ் ஜியோ 2-ஆம் இடம்
அதிக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மாநிலங்கள்:  தமிழகத்துக்கு 4-ஆம் இடம்
கரூர் வைஸ்யா வங்கி மொத்த வணிகம் ரூ.1.10 லட்சம் கோடி
பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி