சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

அடுத்த நிதியாண்டில் இரு புதிய மாடல்கள் அறிமுகம்: மாருதி சுஸுகி

DIN | Published: 08th January 2019 12:59 AM


நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக திகழும் மாருதி சுஸுகி இந்தியா அடுத்த நிதியாண்டில் இரண்டு புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா பிடிஐ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: நடப்பு நிதியாண்டில் இதுவரையில் இரண்டு புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், நான்காவது காலாண்டில் மேலும் ஒரு புதிய மாடல் கார் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
நிறுவனம் வரும் 2019-20-ஆம் நிதியாண்டில் இரண்டு பிராண்டில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவுள்ளது.
புதிய பாதுகாப்பு விதிமுறைகளை ஜூன் மாதத்துக்குள் அமல்படுத்த வேண்டியிருப்பதால் ஏர்பேக்ஸ், சீட் பெல்ட் ரிமைண்டர், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.

More from the section

ஃபோர்டு இந்தியாவின் புதிய எண்டவர் கார் அறிமுகம்
இந்தியாவில் ஹெலிகாப்டர்களுக்கான தேவை சூடுபிடிக்கும்: ஏர்பஸ்
தன்னிச்சையான கடன் மேலாண்மை அலுவலகத்தை அமைப்பதற்கான நேரமிது : நீதி ஆயோக்
ரூ.2,951 கோடி இடைக்கால ஈவுத்தொகையை வழங்கியது என்டிபிசி
ஏற்ற இறக்கத்தில் பங்குச் சந்தை