இந்தியாவில் ஹெலிகாப்டர்களுக்கான தேவை சூடுபிடிக்கும்: ஏர்பஸ்

இந்தியாவில் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் ஹெலிகாப்டர்களுக்கான தேவை சூடுபிடிக்கும் என ஏர்பஸ் நிறுவனம் முன்கணிப்பு செய்துள்ளது.
இந்தியாவில் ஹெலிகாப்டர்களுக்கான தேவை சூடுபிடிக்கும்: ஏர்பஸ்


இந்தியாவில் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் ஹெலிகாப்டர்களுக்கான தேவை சூடுபிடிக்கும் என ஏர்பஸ் நிறுவனம் முன்கணிப்பு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
உள்நாட்டுப் போக்குவரத்துக்கு தேவைப்படும் ஹெலிகாப்டர்கள் எண்ணிக்கை எதிர்காலத்தில் கணிசமான அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் 50-75 ஹெலிகாப்டர்கள் வரையில் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஹெச்145 ஹெலிகாப்படரை பொருத்தவரையில் அது பல்வேறு பணிகளை செய்து முடிக்கக்கூடியது. இது ஜார்க்கண்ட் மாநிலத்தில் கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றார் அவர். 
ஹெலிகாப்டர் பயன்பாட்டில் ஹெச்பிசிஎல் நிறுவனம் முன்னோடியாக உள்ளது. எண்ணெய்-எரிவாயு துறை பணிகளில் இந்நிறுவனம் பெருமளவு ஹெலிகாப்டரை ஈடுபடுத்தி வருகிறது. 
ஹெச்பிசிஎல் நிறுவனம், ஏர்பஸ் ஏஎஸ்365 என்3 டௌபின்ஸ் உள்ளிட்ட 10 ஹெலிகாப்டர்களை தற்போது இயக்கி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com