பங்குச் சந்தையில் தொடர் சரிவு

மும்பை பங்குச் சந்தையில் தொடர்ந்து ஒன்பதாவது நாளாக சரிவு நிலை காணப்பட்டது. வெளிநாட்ட முதலீடுகள் திரும்பப் பெற்றது, தகவல் தொடர்பு
பங்குச் சந்தையில் தொடர் சரிவு


மும்பை பங்குச் சந்தையில் தொடர்ந்து ஒன்பதாவது நாளாக சரிவு நிலை காணப்பட்டது. வெளிநாட்ட முதலீடுகள் திரும்பப் பெற்றது, தகவல் தொடர்பு நிறுவனப் பங்குகளின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 146 புள்ளிகள் சரிவுற்றது.
சர்வதேச பங்குச் சந்தைகளில் காணப்பட்ட சரிவு நிலை இந்திய பங்குச் சந்தைகளிலும் பிரதிபலித்தது. குறிப்பாக ஐரோப்பிய சந்தைகளில் சரிவ நிலை இருந்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் உறவில் புதிய பதற்ற நிலை ஏற்பட்டிருப்பதும் பங்கு வர்த்தகத்தை பாதித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.  நாள் முழுவதும் பங்கு வர்த்தகம் ஏற்ற-இறக்கத்துடன் காணப்பட்டது. சென்செக்ஸ் 489 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தபோதிலும், இறுதியில் 35,352 புள்ளிகளாக நிலைத்தது. இது திங்கள்கிழமை நிலையைக் காட்டிலும் 146 புள்ளிகள் குறைவாகும்.
தகவல் தொழில்நுட்ப பங்குகளைப் பொருத்தவரையில், டாடா கன்சல்டன்ஸி, இன்போசிஸ் நிறுவனங்களின் பங்குகள் 3 சதவீதம் வரை இழப்பை சந்தித்தன. மொத்தத்தில் இந்த துறைப் பங்குகள் 2 சதவீத வீழ்ச்சியைக் கண்டன. என்டிபிசி, இண்ட்ஸ்இந்த், ஹீரோ மோட்டோகார்ப், எச்டிஎப்சி, பஜாஜ் ஆட்டோ, எச்.ஸி.எல். டெக், ஹிந்துஸ்தான் யுனிலீவர், மாருதி சுஸுகி, பவர்கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனப் பங்கு விலை 2 சதவீதம் வரை சரிந்தது.
அதே சமயத்தில், வேதாந்தா, ஐசிஐசிஐ வங்கி, ஓஎன்ஜிசி, மஹிந்திரா, லார்சன் அண்ட் டூப்ரோ, டாடா ஸ்டீல், பாரத ஸ்டேட் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர்டெல், ஐடிசி பங்கு விலை 3.3 சதவீதம் வரை அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தின்போது வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,239.79 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்திய முதலீட்டு நிறுவனங்கள் நிகர அளவில் ரூ.2,336.74 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கின.
தேசிய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 36 புள்ளிகள் சரிந்து 10,604 புள்ளிகளாக நிலைத்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com