தொழில்முனைவுக்கான விதிமுறைகள் தளர்வு புதிய தொழில் முதலீடுகளை ஊக்குவிக்கும்

தொழில்முனைவுக்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது புதிய தொழில்களில் முதலீடுகளை ஊக்குவிக்கும் என்று துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தொழில்முனைவுக்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது புதிய தொழில்களில் முதலீடுகளை ஊக்குவிக்கும் என்று துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து இந்தியன் ஏஞ்சல் நெட்வொர்க் நிறுவனத் தலைவர் பத்மஜா ரூபாரெல் கூறியதாவது:
புதிய தொழில்களை தொடங்குவதற்கான விதிமுறைகளை தளர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த முன்னேற்றத்தால், புதிய தொழில்களில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த பல்வேறு தடைகள் நீங்கியுள்ளன.
எனவே, புதிய தொழில் முதலீடுகள் இனி சரளமாகக் குவியும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா இதுவரை உலகின் தொழில்முனைவு மையமாக விளங்கி வந்தது.
மத்திய அரசின் இந்த புதிய அறிவிப்பின் மூலம் மூலம் புதிய நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை ரூ.25 கோடியிலிருந்து ரூ.100 கோடியாக உயர்த்த வழி ஏற்பட்டுளளது.
இதனால் புதிதாகக் தொடங்கப்படும் தொழில்கள் உலக அளவில் வர்த்தகம் மேற்கொள்ள முடியும். வர்த்தக வாய்ப்புகள் அதிகரிக்கப்படுவது, இந்தியாவில் புதிய தொழில்களுக்கான முதலீடுகளை பெருமளவில் ஊக்குவிக்கும் என்றார் அவர்.
மத்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தொழில்முனைவு நிறுவனம் என்பதன் வரையறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, முழு வரி விலக்கு பெறுவதற்குத் தகுதியான புதிய நிறுவனங்களின் குறைந்தபட்ச முதலீடு, ரூ.10 கோடியிலிருந்து ரூ.25 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com