நாட்டின் ஏற்றுமதி 3.74 சதவீதம் அதிகரிப்பு

நாட்டின் ஏற்றுமதி சென்ற ஜனவரி மாதத்தில் 3.74 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.


நாட்டின் ஏற்றுமதி சென்ற ஜனவரி மாதத்தில் 3.74 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
பொறியியல், தோல் பொருள்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளின் செயல்பாடு சுணக்கமாக இருந்ததையடுத்து, ஜனவரி மாதத்தில் நாட்டின் ஏற்றுமதியானது 3.74 சதவீத மிதமான வளர்ச்சியை மட்டுமே எட்டியுள்ளது.
அதன்படி 2018 ஜனவரியில் 2,541 கோடி டாலராக இருந்த ஏற்றுமதி 2019 ஜனவரியில் 2,636 கோடி டாலராக உயர்ந்துள்ளது. 
2018 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நாட்டின் ஏற்றுமதி சரிவடைந்தே காணப்பட்டது.
ஜனவரியில், பொறியியல் துறையின் ஏற்றுமதி 1 சதவீத அளவுக்கே வளர்ச்சி கண்டிருந்தது. தோல் துறை, நவரத்தினங்கள் மற்றும் ஆபரண துறையின் ஏற்றுமதி வளர்ச்சி முறையே 0.33 சதவீத அளவுக்கே இருந்தது. அதேசமயம், பெட்ரோலியம் ஏற்றுமதி 19 சதவீதம் பின்னடைவை சந்தித்திருந்தது.
இறக்குமதியைப் பொருத்தவரையில் கடந்த மாதத்தில் 4,100 கோடி டாலராக வே இருந்தது. கடந்த 2018 ஜனவரியில் வர்த்தக பற்றாக்குறை  1,567 கோடி டாலராக காணப்பட்டது. அதனுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு ஜனவரியில் வர்த்தக பற்றாக்குறை 1,473 கோடி டாலர் என்ற அளவில் குறைந்தே இருந்தது. இருப்பினும் 2018 டிசம்பரில் காணப்பட்ட 1,300 கோடி டாலர் வர்த்தக பற்றாக்குறையுடன் ஒப்பிடும்போது இது அதிகம் என வர்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com