டெய்ம்லர் டிரக் விற்பனை 35% அதிகரிப்பு

டெய்ம்லர் ஏஜி-யின் துணை நிறுவனமான டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெஹிக்கிள் (டிஐசிவி) டிரக் விற்பனை சென்ற 2018-ஆம் ஆண்டில் 35 சதவீதம் அதிகரித்தது.
டெய்ம்லர் டிரக் விற்பனை 35% அதிகரிப்பு


டெய்ம்லர் ஏஜி-யின் துணை நிறுவனமான டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெஹிக்கிள் (டிஐசிவி) டிரக் விற்பனை சென்ற 2018-ஆம் ஆண்டில் 35 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து டிஐசிவி-யின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சத்யகம் ஆர்யா கூறியதாவது:
கடந்த 2018-ஆம் ஆண்டு நிறுவனத்துக்கு மிகச் சிறப்பாக இருந்தது. அவ்வாண்டில் டிரக்குகளின் விற்பனை 22,532-ஆக இருந்தது. கடந்த 2017-ஆம் ஆண்டில் நிறுவனம் விற்பனை செய்த 16,717 டிரக்குகளுடன்ஒப்பிடுகையில் இது 35 சதவீத வளர்ச்சியாகும்.
கடந்த 2017-ஆம் ஆண்டில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சியானது 28 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில், சென்ற ஆண்டில் விற்பனை வளர்ச்சி அதனை விஞ்சியுள்ளது. 
அதேபோன்று ஏற்றுமதியும் நிறுவனத்துக்கு சாதகமாகவே இருந்தது. 2018-இல் 7,054 டிரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. 2017-இல் விற்பனையான 6,553 டிரக்குகளுடன் ஒப்பிடுகையில் இது 8 சதவீதம் அதிகமாகும்.
வாடிக்கையாளர்களிடம் பாரத்பென்ஸ் தயாரிப்புகளுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, நாடு தழுவிய அளவில் விற்பனை மற்றும் சேவை மையங்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-இல் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியா, சிலி, ஐவரி கோஸ்ட்,  கேமரூன், ரூவாண்டா, கானா, எகிப்து உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு டெய்ம்லர் டிரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள டிஐசிவி-க்கு சொந்தமான ஆலையில் வாகன உற்பத்தி 1 லட்சத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com