4ஜி பதிவிறக்க வேகத்தில் ஜியோ முதலிடம்: டிராய் புள்ளிவிவரம்

சென்ற ஜனவரியில் செல்லிடப்பேசிகளில் 4ஜி பதிவிறக்க வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
4ஜி பதிவிறக்க வேகத்தில் ஜியோ முதலிடம்: டிராய் புள்ளிவிவரம்


சென்ற ஜனவரியில் செல்லிடப்பேசிகளில் 4ஜி பதிவிறக்க வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இதுகுறித்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின் (டிராய்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சென்ற ஜனவரி மாதத்தில் செல்லிடப்பேசிகளில் ஜியோ நிறுவனத்தின் 4ஜி பதிவிறக்க வேகம் சராசரியாக 18.8 எம்பிபிஎஸ்-ஆக இருந்தது.இது,  போட்டியாளராக உள்ள  பார்த்தி ஏர்டெல் நிறுவனத்தின் சராசரி 4ஜி வேகமான 9.5எம்பிபிஎஸ் உடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்கு அதிகம்.
வோடஃபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்களின் பதிவிறக்க வேகம் முறையே 6.7 எம்பிபிஎஸ், 5.5 எம்பிபிஎஸ்-ஆக இருந்தது.
அதேசமயம், 4ஜி பதிவேற்ற வேகப் பட்டியலில்  ஆதித்யா பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஐடியா முதலிடத்தைப் பிடித்தது. அதன்படி, இதன் பதிவேற்ற வேகம் சென்ற ஜனவரியில் 5.8 எம்பிபிஎஸ்-ஆக இருந்தது. இந்த நிறுவனத்தைத் தொடர்ந்து, வோடஃபோனின் பதிவேற்ற வேகம் 5.4எம்பிபிஎஸ்-ஆகவும், ரிலையன்ஸ் ஜியோ 4.4 எம்பிபிஎஸ் ஆகவும், ஏர்டெல் 3.8 எம்பிபிஎஸ்-ஆகவும் இருந்தன.
மைஸ்பீடு செயலி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் கண்டறியப்பட்டதாக டிராய் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com