3 ஆண்டுகளில் 55 சுரங்கங்கள் ஏலம்

கடந்த 3 ஆண்டுகளில் நிலக்கரி சுரங்கங்கள் உள்ளிட்ட 55 சுரங்கங்கள் ஏலத்தில் விடப்பட்டதாகவும், அதில் 5 சுரங்கங்கள் செயல்பாட்டில் இருப்பதாகவும் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது. 


கடந்த 3 ஆண்டுகளில் நிலக்கரி சுரங்கங்கள் உள்ளிட்ட 55 சுரங்கங்கள் ஏலத்தில் விடப்பட்டதாகவும், அதில் 5 சுரங்கங்கள் செயல்பாட்டில் இருப்பதாகவும் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது. 
இதுகுறித்து, சுரங்கத் துறை செயலர் அனில் கோபிசங்கர் முகிம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
கடந்த 3 ஆண்டுகளில் ஏலத்தில் விடப்பட்ட 55 சுரங்கங்களில், 5 சுரங்கங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. இன்னும் 2-3 சுரங்கங்கள் அடுத்த மாத இறுதியில் செயல்படத் தொடங்கும். அடுத்த நிதியாண்டில் 15 சுரங்கங்கள் செயல்பாட்டுக்கு வரும். 
தனியார் பங்களிப்பு உள்ளிட்ட சுரங்கத் துறையின் பல்வேறு விவகாரங்கள் தொடர்பான தேசிய சுரங்கக் கொள்கை 2018 -ஆனது, ஒப்புதலுக்கான இறுதி நிலையில் உள்ளது. அதன் இறுதி வரைவு தயாராகி வருகிறது என்று அனில் கோபிசங்கர் முகிம் கூறினார். 
சுரங்க ஏலத்துக்கு மிகப்பெரிய உந்துதலை அளிக்கும் வகையில், சுரங்கங்களை விற்பனை செய்யும் முன்பாகவே அதற்கான சுற்றுச்சூழல் துறை ஒப்புதல், நில உரிமம் உள்ளிட்டவற்றை வழங்குவது தொடர்பாக பரிசீலித்து வருவதாக மத்திய அரசு ஏற்கெனவே கூறியிருந்தது. 
அத்துடன், 2 ஆண்டு குத்தகை காலத்துக்கு சுரங்கங்களை ஏலத்தில் எடுக்கும் 288 புதிய குத்தகைதாரர்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் தடையில்லாச் சான்றை ஒரே சான்றாக வழங்குவதற்கு கொள்கை அளவிலும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
சுரங்கங்களை ஏலம் விட்டதில் கிடைத்துள்ள ரூ.1.83 லட்சம் கோடியானது குத்தகை காலத்துக்கான வருவாயாக மாநில அரசுகளுக்கு கிடைக்கும் என்றும், ஏல நடைமுறைக்கான கூடுதல் வருவாய் ரூ.1.43 லட்சம் கோடி என்றும் மத்திய அரசு கடந்த மாதம் தெரிவித்திருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com