டாடா மோட்டார்ஸ் இழப்பு ரூ.26,960 கோடி

ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களுக்கான தேவை சரிவடைந்ததையடுத்து  டாடா மோட்டார்ஸ் மூன்றாம் காலாண்டில் ஒட்டுமொத்த அளவில்
டாடா மோட்டார்ஸ் இழப்பு ரூ.26,960 கோடி


ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களுக்கான தேவை சரிவடைந்ததையடுத்து  டாடா மோட்டார்ஸ் மூன்றாம் காலாண்டில் ஒட்டுமொத்த அளவில்  ரூ.26,960.8 கோடி இழப்பைக் கண்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செபியிடம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
டாடா மோட்டார்ஸின் மொத்த செயல்பாட்டு வருவாய் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.77,582.71 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய ரூ.74,337.7 கோடியுடன் ஒப்பிடுகையில் 4.36 சதவீதம் அதிகமாகும்.
தனிப்பட்ட முறையில் நிறுவனத்தின் வருவாய் ரூ.16,186.15 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.16,477.07 கோடியாக காணப்பட்டது.
மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த இழப்பு ரூ.26,960.8 கோடியைத் தொட்டுள்ளது. அதேசமயம், 2017-18 நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ரூ.1,214.6 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியிருந்தது. தனிப்பட்ட  நிகர லாபம் ரூ.211.59 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.617.62 கோடியானது.
ஜேஎல்ஆர் வருவாய் 1 சதவீதம் குறைந்து 6.2 பில்லியன் பவுண்டுகளாக இருந்தது என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com