ஜனவரி மாதத்தில் நானோ கார் விற்பனை பூஜ்யம்

மக்களின் கார் என்று முன்பு வருணிக்கப்பட்ட டாடா நானோ ஜனவரி மாதத்தில் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை என்பது 
ஜனவரி மாதத்தில் நானோ கார் விற்பனை பூஜ்யம்


மக்களின் கார் என்று முன்பு வருணிக்கப்பட்ட டாடா நானோ ஜனவரி மாதத்தில் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதேபோன்று, ஜனவரி மாதத்தில் அதன் உற்பத்தியும் பூஜ்யம் என்ற  நிலையை எட்டியுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து ரத்தன் டாடாவின் கனவான நானோ கார் திட்டத்தில் மேலும் முதலீடு செய்யப்போவதில்லை என டாடா மோட்டார்ஸ் அறிவித்தது. 
இதையடுத்து, வரும் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து நானோ கார் உற்பத்தியையும், அதன் விற்பனையையும் நிறுத்தப்படும் என்று டாடா மோட்டார்ஸின்அதிகாரி அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், செபியிடம் அளித்த தகவலின்படி, சென்ற ஜனவரி மாதத்தில் ஒரு நானோ கார் கூட உற்பத்தி செய்யப்படவில்லை என டாடா மோட்டார் தெரிவித்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரியில் இந்நிறுவனம் 83 நானோ கார்களை உற்பத்தி செய்திருந்தது. 
அதேபோன்று, ஜனவரி மாதத்தில் உள்நாட்டு சந்தையில் நானோ கார் விற்பனை பூஜ்யம் என்பதையும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. 2018 ஜனவரியில் நானோ விற்பனை 62-ஆக இருந்தது. மேலும், உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் நானோ கார் ஏற்றுமதி செய்யப்படவில்லை .
 டாடா மோட்டார்ஸ் செய்தித் தொடர்பாளர் இதுதொடர்பாக கூறியபோது:
நானோ கார் அதன் தற்போதைய வடிவத்தில் புதிய பாதுகாப்பு மற்றும் மாசுகட்டுப்பாட்டு விதிமுறைகளை நிறைவு செய்ய இயலாது. அதற்கு, இத்திட்டத்தில் மேலும் புதிய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com