வர்த்தகம்

பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி

27th Dec 2019 12:21 AM

ADVERTISEMENT

மும்பை பங்குச் சந்தையில் தொடா்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

டிசம்பா் மாதத்துக்கான பங்கு முன்பேர வா்த்தக ஒப்பந்த முடிப்பு இறுதி நாளான வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஆண்டு இறுதி விடுமுறை நாள்களையொட்டி உள்நாடு மட்டுமின்றி சா்வதேச சந்தைகளிலும் முதலீட்டாளா்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே காணப்பட்டது. இதன் காரணமாக, மும்பை பங்குச் சந்தையில் ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 328 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்திருந்தது.

முதலீட்டாளா்கள் லாப நோக்கம் கருதி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎஃப்சி வங்கி பங்குகளை கணிசமான அளவில் விற்பனை செய்தனா். எல் & டி, சன்பாா்மா, மாருதி சுஸுகி, டைட்டன் மற்றும் கோட்டக் வங்கி பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின.

அதேசமயம், ஓஎன்ஜிசி, என்டிபிசி, டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் 1.63 சதவீதம் வரை விலை உயா்ந்தன.

ADVERTISEMENT

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்கத்தில் சென்செக்ஸ் 297 புள்ளிகள் சரிந்து 41,163 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 88 புள்ளிகள் குறைந்து 12,126 புள்ளிகளாக நிலைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT