2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பார்சிலோனாவில் நடைபெறவிருக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் தங்களின் புதிய தயாரிப்பான எக்ஸ்பீரியா கைபேசியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஜப்பானிய தொழில்நுட்ப நிறுவனமான சோனி. இந்த புதிய ஃபோன் பஞ்ச்-ஹோல் கேமரா வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான காப்புரிமையை சோனி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக வெளியிடப்பட்ட காப்புரிமை பெற்ற WIPO குளோபல் டிசைன் டேட்டாபேஸ் கொண்ட இந்தப் புதிய சோனி கைப்பேசி பயனர்களுக்கு அடுத்த தயாரிப்புக்கள் குறித்த தகவல்கள் தரும். இது மினிமம் டாப் பெசல்ஸ் திரையை உடையது என்று இணையச் செய்தி தளமான ஜிஎஸ்எம்அரேனா சமீபத்தில் தெரிவித்துள்ளது.
சோனி சமீபத்தில் வெளியிட்ட உயர் ரக கைப்பேசிகளில் 21: 9 எனுமளவில் ஆஸ்பெக்ட் ரேஷியோ இருந்தது. மேலும் செல்ஃபி கேமராவை திரையில் நகர்த்துவதன் மூலம் திரையை மேலும் நீட்டிக்க கூடிய வசதியும் இதிலுண்டு. இதில் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 865 எஸ் ஓ ஸி மற்றும் 12 ஜிபி ராம் உள்ளது. கூடுதலாக, இந்த கைப்பேசியில் 5 ஜி இணைப்பு மற்றும் அதன் பின்புறத்தில் ஆறு கேமராக்கள் மற்றும் ஒரு QHD திரையுடன் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு எக்ஸ்பீரியா 1 மாடலுடன் எக்ஸ்பீரியா 10 மற்றும் 10 பிளஸுடன் சேர்த்து வெளியிட்டது சோனி என்பது குறிப்பிடத்தக்கது.