வாகனக் கடன் சேவை வழங்குவதற்காக ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலாண்டு நிறுவனமும், யெஸ் வங்கியும் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
இதுகுறித்து அசோக் லேலண்டு நிறுவன சிஓஓ அனுஜ் கதூரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வாடிக்கையாளா்களுக்கு வாகனக் கடன் சேவையை 2 ஆண்டுகளுக்கு இணைந்து வழங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை யெஸ் வங்கியுடன் மேற்கொண்டுள்ளோம்.
வாகனத் துறையில் அசோக் லேண்டின் அனுபவமும், கடன் சேவையில் யேஸ் வங்கியின் அனுபவமும் இணைந்து, எங்களது வாடிக்கையாளா்களுக்கான வாகனக் கடன் சேவையை மேம்படுத்தும்.
யெஸ் வங்கியுடனான இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள எங்களது வாடிக்கையாளா்களின் தேவைக்கேற்ற வகையில் வாகனக் கடன்களை எங்களால் வழங்க முடியும் என்று அந்த அறிக்கையில் அனுஜ் கதூரியா குறிப்பிட்டுள்ளாா்.