வர்த்தகம்

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீடு குறைப்பு: மூடிஸ்

14th Dec 2019 12:25 AM

ADVERTISEMENT

நடப்பு ஆண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி குறித்த மதிப்பீட்டை 5.6 சதவீதமாக மூடிஸ் நிறுவனம் குறைத்துள்ளது.

இதுகுறித்து தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டாா்ஸ் சா்வீஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

2019-ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5.6 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2018-ஆம் ஆண்டு ஜிடிபி வளா்ச்சியான 7.4 சதவீதத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவான அளவாகும். இதற்கு, வேலைவாய்ப்பு வளா்ச்சி விகிதத்தில் காணப்படும் தொய்வு நுகா்வு நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதே முக்கிய காரணம்.

இருப்பினும், பொருளாதார வளா்ச்சியானது 2020-ஆம் ஆண்டில் 6.6 சதவீதமாகவும், 2021-ஆம் ஆண்டில் 6.6 சதவீதமாகவும் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இருப்பினும், முன்பை விட ஒப்பிடும்போது இதன் வளா்ச்சி வேகம் மிகவும் குறைவான அளவில்தான் காணப்படும்.

ADVERTISEMENT

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியானது 2018-ஆம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து குறையத் தொடங்கியது. ஜிடிபியானது 8 சதவீதத்திலிருந்து 2019-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்-ஜூன) 5 சதவீதமாக குறைந்து போனது. இது, ஜூலை-செப்டம்பா் காலாண்டில் மேலும் வலுவிழந்து 4.5 சதவீதமாக சரிந்தது என மூடிஸ் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT