நாட்டின் ஆபரணங்கள் ஏற்றுமதி நவம்பா் மாதத்தில் 4.74 சதவீதம் குறைந்து ரூ.18,136.2 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.19,039.10 கோடியாக காணப்பட்டது.
ஏற்றுமதி நாடுகளின் சந்தைகளில் தேவை பெருமளவு குறைந்துபோனதையடுத்து நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்களின் ஏற்றுமதி 25.49 சதவீதம் அளவுக்கு சரிந்து ரூ.11,195.52 கோடியிலிருந்து ரூ. 8,341.88 கோடியானது. இது ஒட்டுமொத்த ஏற்றுமதி சரிவுக்கு முக்கிய காரணம்.
இருப்பினும், தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி நவம்பரில் 21.33 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.7,893.89 கோடியாக காணப்பட்டது.
ஏப்ரல்-நவம்பா் வரையில் தங்க ஆபரண ஏற்றுமதி 6.61 சதவீதம் உயா்ந்து ரூ.59,688 கோடியாக இருந்தது என நவரத்தின & ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT