வர்த்தகம்

தொடர் முன்னேற்றத்தில் பங்குச் சந்தை சென்செக்ஸ் 147 புள்ளிகள் அதிகரிப்பு

28th Aug 2019 12:56 AM

ADVERTISEMENT


இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் மூன்றாவது நாளாக ஏற்றத்துடன் காணப்பட்டது.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கத் தேவையான பல்வேறு சலுகை அறிவிப்புகள் வெளியானது மற்றும் மத்திய அரசுக்கு நிதி ஆதரவை வழங்க ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது ஆகியவற்றால் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்கு வர்த்தக்தில் ஈடுபட்டனர்.
உள்நாட்டு பொருளாதார காரணிகளைத் தவிர, அமெரிக்க-சீன வர்த்தப் போர் தொடர்பான நேர்மறையான முன்னேற்றமும் இந்தியப் பங்குச் சந்தைகளின் ஏற்றத்துக்கு கூடுதல் வலு சேர்த்தது.
மும்பை பங்குச் சந்தையில், உலோகம், மோட்டார் வாகனம், எண்ணெய்-எரிவாயு, பொறியியல் சாதனங்கள் துறை பங்குகள் 2.04 சதவீதம் வரை விலை ஏற்றம் கண்டன.
அதேசமயம், தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகள் 2.26 சதவீதம் வரை விலை குறைந்தன.
அந்தச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 147 புள்ளிகள் அதிகரித்து 37,641 புள்ளிகளாக நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 47 புள்ளிகள் உயர்ந்து 11,105 புள்ளிகளாக நிலைத்தது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT