வர்த்தகம்

ஊக்கச் சலுகை அறிவித்தாலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாகவே இருக்கும்: மூடிஸ்

28th Aug 2019 12:57 AM

ADVERTISEMENT


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் வகையில் அரசு அறிவிப்புகளை வெளியிட்டாலும் புறக்காரணி சிக்கல்களால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 6.4 சதவீதமாகவே இருக்கும் சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:
முடங்கிக் கிடக்கும் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் விதத்தில் வரி சலுகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும், பல்வேறு துறைகளில் சில சீர்திருத்த நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. இவை, முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளுக்கு ஓரளவுக்கு பக்கபலமாக இருக்கும். மேலும், பொதுத் துறை வங்கிகளுக்கு மூலதனத்தை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது அவை கடன் வழங்கும் திறனை அதிகரிக்கும் என்பதுடன், சந்தையில் அதிக அளவில் பணப்புழக்கம் ஏற்படவும் வழிவகுக்கும்.
இருப்பினும், உள் மற்றும் புறக்காரணிச் சிக்கல்கள் நடப்பாண்டு முழுவதும் நீடிக்கும் என்பதால் வரும் 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடையும் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதம் அளவுக்கே இருக்கும். இது, அடுத்த ஆண்டில் 6.8 சதவீதம் வரை அதிகரிக்கும் என மூடிஸ் தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT