பண்டிகை காலத்தில் கார் விற்பனை வேகமெடுக்கும்: மாருதி சுஸுகி நம்பிக்கை

வரும் பண்டிகை காலத்தில் கார் விற்பனை வேகமெடுக்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பண்டிகை காலத்தில் கார் விற்பனை வேகமெடுக்கும்: மாருதி சுஸுகி நம்பிக்கை


வரும் பண்டிகை காலத்தில் கார் விற்பனை வேகமெடுக்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநர் (சந்தைப்படுத்துதல் & விற்பனை) சஷங் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளதாவது:
மோட்டார் வாகன துறைக்கு நிவராணம் அளிக்கும் விதமாக மத்திய அரசு சிறப்பு சலுகை திட்டங்களை அறிவிக்குமா என்பது குறித்து தற்போது ஊகிக்க போவதில்லை. இருப்பினும், எங்களது அணுகுமுறை மிகவும் ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டுமென்பதில் அதிக முயற்சி செய்து வருகிறோம்.
அதன்படி, புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதன் வாயிலாகவும், வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் சலுகைகளை வழங்குவதன் மூலமாகவும் கார் விற்பனையை வேகப்படுத்த முடியும். 
வரும் பண்டிகை காலத்தில் காருக்கான தேவை சூடுபிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. குறிப்பாக, ஊரகப் பகுதி சந்தைகளில் கார் விற்பனை மீண்டும் விறுவிறுப்படையும் என்பதே எங்களின் திண்ணமான நிலைப்பாடு என்றார் அவர்.
40,618 வேகன்ஆர் கார்களை திரும்பப் பெறுகிறது மாருதி: பழுதை சரி செய்து தருவதற்காக 40,618 வேகன்ஆர் கார்களை திரும்பப் பெறவுள்ளதாக மாருதி சுஸுகி வெள்ளிக்கிழமை தெரிவித்தது. 
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:
கடந்த 2018 நவம்பர் 15-ஆம் தேதி முதல் 2019 ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட 40,618 வேகன்ஆர் (1லிட்டர் என்ஜின்) கார்களில் எரிபொருள் குழாய் அமைப்பில் பழுதிருக்க வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்தக் கார்களை திரும்பப் பெற்று இலவசமாக சரி செய்து தரும் நடவடிக்கையை நிறுவனம் இன்று முதல் தொடங்குகிறது என்று மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com