வர்த்தகம்

பஜாஜ் பின்சர்வின் 'பிளெக்ஸி' தனிநபர் கடன்- எப்படிப் பெறுவது? என்ன பயன்கள்?

23rd Aug 2019 11:51 AM

ADVERTISEMENT

 

நாட்டில் மிகவும் பிரபலமான நிதித் தீர்வுகளில் ஒன்று தனிநபர் கடன்கள். நாட்டின் முதன்மை வங்கியான ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2017ம் ஆண்டு பிப்ரவரி முதல் 2018ம் ஆண்டு பிப்ரவரி வரை பாதுகாப்பற்ற தனிநபர் கடன்கள் 20.4% அதிகரித்துள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி நபர் கடன்கள் அதிகரித்துள்ளதற்கு முக்கிய காரணம் நாம் தேவைக்கு செலவு செய்வதே ஆகும். 

நீங்கள் வாங்கும் தனிநபர் கடன்கள் உங்களுக்கு பெரும்பாலான இடங்களில் உதவுகிறது. உயர்கல்விக்கான செலவுகள்,  சுற்றுலா செல்வது, திருமணம் உள்ளிட்ட வீட்டு நிகழ்ச்சிகள், மருத்துவ செலவுகள் என பல அவசரத் தேவைகளுக்குத் தனிநபர் கடனை பயன்படுத்தலாம். நீங்கள் எளிய முறையில், உங்களுக்கான கடன்களை பெற பஜாஜ் பின்சர்வ் போன்ற நிறுவனங்கள் வழங்கும் பிளெக்ஸி தனிநபர் கடனை பெற்று பயன்பெறலாம்..

பஜாஜ் பின்சர்வ்-இன்  தனிநபர் 'பிளெக்ஸி' தனிபர் கடனைப் பெற ஐந்து முக்கியக் காரணங்கள்: 

ADVERTISEMENT

1. எந்த சிக்கலுமின்றி விண்ணப்பம் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படுதல் 
 
பஜாஜ் பின்சர்வ்-இன் 'பிளெக்ஸி' தனிநபர் கடனைப் பெற பஜாஜ் பின்சர்வ்-இன் இணையத்தளத்திற்குச் சென்று, அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி விபரங்கள் உங்களுக்கு பொருந்துகிறதா என்று பார்த்து விண்ணப்பிக்கவும். முழுவதுமாக ஆன்லைன் மூலமாகவே இதனை நீங்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், கே.ஒய்.சி(KYC) மற்றும் தேவையான ஆவணங்களை ஆன்லைன் மூலமாக அளிக்கும் பட்சத்தில், அடுத்த 5 நிமிடத்தில் உங்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பித்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் உங்களது வங்கிக்கணக்கிற்கு பணம் செலுத்தப்படும். 

2. பகுதியாகப் பிரித்து பணம் செலுத்துதல் மற்றும் பெறுதல்

நீங்கள் பெறும் ஃப்ளெக்ஸி தனிநபர் கடனை, உங்களது வசதிக்கு ஏற்ப கடன் தொகையிலிருந்து பணத்தை பகுதியாகப் பிரித்து அனுப்பலாம் மற்றும் பெறலாம். இதற்காக நீங்கள் மீண்டும் மீண்டும் உங்களது ஆவணங்களை சமர்ப்பிக்கத் தேவையில்லை பஜாஜ் பின்சர்வ்-இல் வாடிக்கையாளர் பிரிவில் கஸ்டமர் போர்டல் -எக்ஸ்பீரியா (customer portal – Experia) என்ற பிரிவில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். யாருக்கு வேண்டுமானாலும் இதன் மூலம் நீங்கள் பணத்தை அனுப்ப மற்றும் பெற முடியும். 

உதாரணமாக நீங்கள் வீட்டுச் சீரமைப்புக்காக கடன் பெற்றால், காண்ட்ராக்டர், பெயிண்டர், கார்பென்டருக்கு என தனித்தனியாக இதில் இருந்தே பணத்தை செலுத்த முடியும். அவசரக் கடன்களையும் நீங்கள் உடனடியாக பெறக்கூடிய வசதி உள்ளது. 

3. உபயோகிக்கும் தொகைக்கு மட்டுமே வட்டி செலுத்துதல்

உங்களது கடன் தொகையில் இருந்து நீங்கள் எவ்வளவு தொகை பெறுகிறீர்களோ, அதற்கு மட்டுமே வட்டி செலுத்தினால் போதுமானது. நீங்கள் பெறும் மொத்தத் தொகைக்கான வட்டியை செலுத்த வேண்டிய தேவையில்லை. நீங்கள் பெறும் தனிநபர் கடன்களுக்கான இ.எம்.ஐ. (EMI) தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும் என்றாலும் நீங்கள் உபயோகித்த பணத்திற்கான இ.எம்.ஐ தொகையை கணக்கிட்டு அதை மட்டும் செலுத்தினால் போதுமானது. Flexi Day-Wise Interest Calculator என்பதையும் உபயோகித்து நாள் ஒன்றுக்கு ஆகும் கடனுக்கான வட்டியை தெரிந்துகொள்ள முடியும். 

4. ஆரம்ப கால இ.எம்.ஐ-யை குறைத்தல்

நீங்கள் ஹைபிரிட் ஃப்ளெக்ஸி கடன் வசதியைத் தேர்வுசெய்தால், ஆரம்ப காலப்பகுதியில் உங்களது இ.எம்.ஐ சுமையை குறைத்துக்கொள்ளலாம். அடுத்தடுத்த முறை இ.எம்.ஐயை வட்டியுடன் சேர்த்து திருப்பிச் செலுத்தலாம். 

உங்களது சேமிப்பை பாதிக்காத அளவிற்கு பஜாஜ் ஃபின்சர்விலிருந்து பெறும்ஃப்ளெக்ஸி தனிநபர் கடன்கள் உங்களுக்கு முழுமையான நிதி கட்டுப்பாட்டை வழங்குகின்றன. 

5. வசதிக்கேற்ப பகுதி முன்பணம் செலுத்துதல்

உங்களது கடன் தொகையில் முன்பணமாக செலுத்தும்போது அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும். இது உங்களது சேமிப்பை பாதிக்கும். ஆனால், பஜாஜ் பின்சர்வில் உங்களது முன்பணத்தை செலுத்துவதற்கு நீங்கள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. இது உங்களது சேமிப்பில் பாதிப்பை ஏற்படுத்தாது. அதுமட்டுமின்றி, உங்களிடம் எப்போதெல்லாம் பணம் இருக்கிறதோ அப்போதெல்லாம் நீங்கள் பணத்தை செலுத்தலாம். இதன்மூலம் உங்களது வட்டித்தொகை குறையும். 

ஃப்ளெக்ஸி கடன் வசதியை நீங்கள் எளிமையாக பெறலாம். கடன் தொகைக்கு இணையான சொத்து பத்திரங்கள் உள்ளிட்டவற்றை அளிக்க தேவையில்லை. கடன் பெறுவதில் எந்த சிக்கலான தகுதி முறைகள் எதுவும் இருக்காது. அதேபோன்று பணத்தை உங்களது வசதிக்கேற்ப பயன்படுத்த முடியும். சிந்தித்து செய்யுங்கள். 

ADVERTISEMENT
ADVERTISEMENT