வர்த்தகம்

காப்பீட்டு வர்த்தகத்தில் கரூர் வைஸ்யா வங்கி-டிஜிட் இன்சூரன்ஸ் உடன்பாடு

23rd Aug 2019 01:06 AM

ADVERTISEMENT


பொதுக் காப்பீட்டு வர்த்தகத்தில் இணைந்து செயல்படும் வகையில்  கரூர் வைஸ்யா வங்கி மற்றும் டிஜிட் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவை உடன்பாடு செய்து கொண்டுள்ளன. 
இதுகுறித்து கரூர் வைஸ்யா வங்கி மற்றும் டிஜிட் இன்சூரன்ஸ் கூட்டாக வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:  
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் கரூர் வைஸ்யா வங்கி மற்றும் டிஜிட் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கிடையில் ஏராளமான ஒற்றுமைகள் இருப்பதை நாங்கள் கண்டறிந்ததன் அடிப்படையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு தேவையான புதுமையான காப்பீட்டுத் தேவைகளை வழங்குவதை நாங்கள் இலக்காக கொண்டு செயல்படவுள்ளோம். காப்பீட்டு பாலிசிகளின் விலை மற்றும் அவற்றுக்கு தீர்வுகாணுதல் அடிப்படையில் எங்களின் வாடிக்கையாளர்கள் அதிக பயனடைவார்கள் என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT