வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

இந்தியச் சந்தையில் சாம்சங்கின் நோட் 10 

DIN | Published: 21st August 2019 01:08 AM


உலகின் முன்னணி மின்னணு சாதனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சாம்சங், தனது சமீபத்திய கேலக்ஸி நோட் 10 மற்றும் 10 பிளஸ் ரக ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.
ரூ.30,000-க்கும் மேல் விலை கொண்ட இந்த போன்கள், சீனாவின் ஒன்பிளஸ் மற்றும் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளுடன் பிரிமியம் வகை ஸ்மார்ட் போன் சந்தையில் போட்டியிடவுள்ளன.
இந்த புதிய ரகங்களின் அறிமுகத்தின் மூலம், அந்தச் சந்தையில் தங்களது சந்தைப் பங்கை 63 சதவீதமாக உயர்த்த முடியும் என்று சாம்சங் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த சந்தைப் பிரிவில் நிறுவனத்தின் சந்தைப்  பங்கு, கடந்த 2018-ஆம் ஆண்டில் 52 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி குறைப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு  
முந்த்ரா துறைமுகத்திலிருந்து மாருதி சுஸுகியின் ஏற்றுமதி 10 லட்சத்தை தாண்டியது
எதிர்பார்ப்புகளுக்கிடையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 470 புள்ளிகள் சரிவு
கனிமங்கள் உற்பத்தியை 200% அதிகரிக்க திட்டம்