ஹீரோ எலக்ட்ரிக்ஸின் புதிய மின் ஸ்கூட்டர்கள் அறிமுகம்

ஹீரோ எலக்ட்ரிக்ஸின் புதிய மின் ஸ்கூட்டர்கள் அறிமுகம்

ஹீரோ எலக்ட்ரிக்ஸ் நிறுவனம், மின்சாரத்தில் இயங்கும் வகையிலான இரு புதிய ஸ்கூட்டர்களை திங்கள்கிழமை அறிமுகம் செய்தது. 


ஹீரோ எலக்ட்ரிக்ஸ் நிறுவனம், மின்சாரத்தில் இயங்கும் வகையிலான இரு புதிய ஸ்கூட்டர்களை திங்கள்கிழமை அறிமுகம் செய்தது. 
ஆப்டிமா இஆர், என்ஒய்எக்ஸ் இஆர் என்ற அந்த இரு மாடல்களின் விற்பனையக விலை முறையே ரூ.68,721 மற்றும் ரூ.69,754-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இரு மாடல்களும் நாடுமுழுவதும் ஹீரோ எல்க்ட்ரிக்ஸ் டீலர்களிடம் விற்பனைக்குக் கிடைப்பதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சோஹிந்தர் கில் கூறினார். 
இந்த இரு மாடல்களிலும் நடப்பாண்டில் ஒரு லட்சம் யூனிட்டுகள் தயாரிக்கவும், அடுத்த மூன்று ஆண்டுகளில் அவற்றின் உற்பத்தி எண்ணிக்கையை ஆண்டுக்கு 5 லட்சம் யூனிட்டுகளாக அதிகரிக்கவும் ஹீரோ எலக்ட்ரிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com