ஐக்கியா: மும்பையில் ஆன்லைன் வர்த்தகம் தொடக்கம்

 ஸ்வீடனைச் சேர்ந்த வீட்டு உபயோக சாதனங்கள் நிறுவனமான ஐக்கியா, இந்தியாவில் முதல் முறையாகத் தனது ஆன்லைன் விற்பனையை மும்பை நகரில் திங்கள்கிழமை தொடங்கியது.
ஐக்கியா: மும்பையில் ஆன்லைன் வர்த்தகம் தொடக்கம்


 ஸ்வீடனைச் சேர்ந்த வீட்டு உபயோக சாதனங்கள் நிறுவனமான ஐக்கியா, இந்தியாவில் முதல் முறையாகத் தனது ஆன்லைன் விற்பனையை மும்பை நகரில் திங்கள்கிழமை தொடங்கியது.
இது தொடர்பாக ஐக்கியா இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பீட்டர் பெட்ùஸல் தெரிவித்ததாவது: இந்தியாவில் நுகர்வோர் ரசனை பெரும் மாற்றத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்த நிலையில், இன்றைய தலைமுறை நுகர்வோருக்கு ஏற்ப, சர்வதேச வடிவங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துவருகிறோம். மும்பை வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு, முதல் முறையாக ஆன்லைன் விற்பனையைத் தொடங்கியுள்ளோம். இதன்படி, ரூ.200-க்கும் குறைவான விலையில் உள்ள ஆயிரம் வீட்டு உபோயக சாதனங்கள் ஆன்லைன் முறையில் விற்பனை செய்யப்படும். 
இந்தியாவில் ஹைதராபாதில் திறக்கப்பட்ட முதல் ஐக்கியா விற்பனையகத்துக்கு 30 லட்சம் வாடிக்கையாளர்கள் வருகை தந்துள்ளனர். நிறுவனத்தின் மூலம் நேரடியாக 45,000 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்தியாவில் தற்போது, 55 சப்ளை நிறுவனங்கள் ஐக்கியாவுக்கான வீட்டு உபயோகப் பொருள்களை உருவாக்கி அளித்து வருகின்றன. இவற்றின் மூலம் சுமார் 4 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com