வர்த்தகம்

ரிலையன்ஸ் கேப்பிட்டல் லாபம் நான்கு மடங்கு அதிகரிப்பு

16th Aug 2019 12:52 AM

ADVERTISEMENT


அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.6,083 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.4,641 கோடியுடன் ஒப்பிடுகையில் 31 சதவீதம் அதிகமாகும். வருமானம் கணிசமாக அதிகரித்ததையடுத்து ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.295 கோடியிலிருந்து நான்கு மடங்கு அதிகரித்து ரூ.1,218 கோடியானது.
நடப்பாண்டு ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி ரிலையன்ஸ் கேப்பிட்டலின் சொத்து மதிப்பு ரூ.79,207 கோடியாக இருந்தது. இது, கடந்தாண்டின் இதேகாலகட்டத்தில் ரூ.83,973 கோடியாக காணப்பட்டது.
பொதுமக்களிடமிருந்து நிரந்தர டொபசிட் எதையும் திரட்டவில்லை என அந்த அறிக்கையில் ரிலையன்ஸ் கேப்பிட்டல் தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT