திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

சில்லறைப் பணவீக்கம் 3.15 சதவீதமாக குறைவு

DIN | Published: 14th August 2019 12:55 AM


சில்லறைப் பணவீக்கம் சென்ற ஜூலை மாதத்தில் 3.15 சதவீதமாக குறைந்துள்ளது.
இதுகுறித்து மத்திய புள்ளியியல் அலுவலகம் (சிஎஸ்ஓ) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
உணவுப் பொருள்களின் விலை அதிகரித்து காணப்பட்ட போதிலும், கடந்த ஜூலை மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 3.15 சதவீதமாக குறைந்துள்ளது. இது, அதற்கு முந்தைய ஜூன் மாதத்தில் 3.18 சதவீதமாகவும், கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலையில் 4.17 சதவீதமாகவும் அதிகரித்து காணப்பட்டன.
சென்ற ஜூன் மாதத்தில் 2.25 சதவீதமாக காணப்பட்ட உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் ஜூலையில் 2.36 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அந்தப் புள்ளிவிவரத்தில் சிஎஸ்ஓ தெரிவித்துள்ளது.
பணவீக்கத்தை 4 சதவீதம் என்ற அளவில் கட்டுக்குள் வைக்க மத்திய அரசு ரிசர்வ் வங்கியை அறிவுறுத்தியுள்ளது. தற்போது சில்லறைப் பணவீக்கம் அந்த அளவிற்கு கீழ்தான்உள்ளது.
ரிசர்வ் வங்கி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடும் நிதி கொள்கை அறிவிப்பில் சில்லறைப் பணவீக்கத்தை முக்கிய காரணியாக ஏற்றுக் கொண்டு அதற்கேற்ற வகையில் முடிவெடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பொருளாதார மந்தநிலை ஏன்?
ஐடிபிஐ வங்கி இழப்பு ரூ.3,800 கோடியாக அதிகரிப்பு
அந்நியச் செலாவணி கையிருப்பில் புதிய உச்சம்
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் நிகர லாபம் 212 சதவீதம் உயர்வு
புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி உஜ்ஜீவன் வங்கி செபிக்கு விண்ணப்பம்