திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

125 சிசி இழுவைத் திறன் கொண்ட பஜாஜ் பல்சர் நியான் அறிமுகம்

DIN | Published: 13th August 2019 06:47 PM


பஜாஜ் பல்சர் 125 எல்.எஸ் (லைட் ஸ்போர்ட்) என்ற போர்வையில் ஏற்றுமதி சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து செய்திகளில் வலம் வந்துள்ளது பஜாஜ் நிறுவனம்.

தற்போது 125 சிசி பல்சர் இந்தியாவுக்கான எல்எஸ் வடிவமைப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று நம்மில் பெரும்பாலோர் எதிர்பார்த்திருந்தாலும், பஜாஜ் தனது புதிய மோட்டார் சைக்கிளுக்கு வழக்கமான பல்சர் வடிவமைப்பைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

பல்சர் நியான் பாரத் ஸ்டேஜ் 4 மாசு உமிழ்வு விதிமுறைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், 5-வேக வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு, வாகனத்தின் முன்பக்கத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் 130 மிமீ பின்புற டிரம் வழங்கப்பட்டுள்ளது. வாகனத்தின் எடை 144 கிலோ உள்ள நிலையில்,  15 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங் வழங்கப்பட்டுள்ளது. 

125 சிசி இழுவைத் திறன் பிரிவில் பஜாஜ் நிறுவனத்தின் குறைந்த விலையாக ரூ.68,794 (எக்ஸ்ஷோரூம் மும்பை) என நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

உற்பத்தி பணிகள் தற்காலிக நிறுத்தம்: சுந்தரம்-கிளேட்டன், ஹீரோ மோட்டோகார்ப் அறிவிப்பு
பயணிகள் வாகன உற்பத்தி 13 சதவீதம் சரிவு
டாடா மோட்டார்ஸின் வாகன விற்பனை 34% சரிவு
மாருதி சுஸுகி கார் விற்பனை 33 சதவீதம் குறைந்தது
டிவிஎஸ் மோட்டார் நிகர லாபம் ரூ.151 கோடி