திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

ரூ.29 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம்10 நாளில் பவுனுக்கு ரூ. 2,176 உயர்வு

DIN | Published: 11th August 2019 01:27 AM

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 10-ஆவது நாளாக  சனிக்கிழமை  அதிகரித்து, புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.28,656-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 10 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2,176 வரை உயர்ந்துள்ளது. 

சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 

பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி ஆபரணத் தங்கம் ரூ.27 ஆயிரத்தைத் தாண்டியது. அதன்பிறகு, தங்கம் விலை நாள்தோறும் உயர்ந்து வந்த நிலையில், கடந்த புதன்கிழமை  விலை ரூ.28 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகும் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்துவந்தது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 10-ஆவது நாளாக சனிக்கிழமை  உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.104 அதிகரித்து ரூ.28,656-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.13 உயர்ந்து, ரூ.3,582-க்கு விற்பனையானது. ஆகஸ்ட் 1-ஆம் தேதி  முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை மொத்தம் 10 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2,176 வரை உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து ரூ.47.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.47,300 ஆகவும் இருந்தது. 

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம்    3,582
1 பவுன் தங்கம்    28,656
1 கிராம் வெள்ளி    47.30
1 கிலோ வெள்ளி    47,300

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பொருளாதார மந்தநிலை ஏன்?
ஐடிபிஐ வங்கி இழப்பு ரூ.3,800 கோடியாக அதிகரிப்பு
அந்நியச் செலாவணி கையிருப்பில் புதிய உச்சம்
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் நிகர லாபம் 212 சதவீதம் உயர்வு
புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி உஜ்ஜீவன் வங்கி செபிக்கு விண்ணப்பம்