வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

மீண்டும் வட்டி குறைப்பு எதிர்பார்ப்புடன் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் தொடக்கம்

DIN | Published: 06th August 2019 01:20 AM


நடப்பு நிதியாண்டுக்கான மூன்றாவது நிதிக் கொள்கை வரும் புதன்கிழமை அறிவிக்கப்படவுள்ள நிலையில் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில்  நிதி கொள்கை குழு ஆலோசனை கூட்டம் (எம்பிசி) திங்கள்கிழமை தொடங்கியது. இதில், கடனுக்கான வட்டி விகிதங்களை மீண்டுமொரு முறை குறைக்க முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டுக்கான மூன்றாவது நிதிக் கொள்கையை அறிவிப்பதற்காக திங்கள்கிழமை தொடங்கிய எம்பிசி-யின் ஆலோசனை கூட்டம் வரும் புதன்கிழமை வரை நடைபெறவுள்ளது.
 இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலை 11.45 மணிக்கு ஆர்பிஐ வலைதளத்தில் வெளியிடப்படும் என்று அந்த அறிக்கையில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  
 மந்த நிலையில் உள்ள பொருளாதாரத்தை ஊக்குவிக்கும்  விதமாக ரிசர்வ் வங்கி அதன் நிதிக் கொள்கையில் கடனுக்கான வட்டி விகிதங்களை (ரெப்போ ரேட்) 0.25 சதவீதம் குறைக்க  வாய்ப்புள்ளது என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ரிசர்வ் வங்கி ஏற்கெனவே கடனுக்கான வட்டி விகிதங்களை மூன்று முறை குறைத்துள்ளது. இந்த நிலையில், நான்காவது முறையாக ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.
வட்டி குறைப்பை தவிர, பணப்புழக்கத்தை மேம்படுத்தவும், வட்டி குறைப்பு பலன்களை வங்கிகள் கடன்வாங்குவோருக்கு கொண்டு சேர்ப்பதை உறுதி செய்யும் வகையிலும் ஆறு உறுப்பினர்கள் அடங்கிய எம்பிசி குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தொழில்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

வரிச்சலுகை அறிவிப்பு எதிரொலி: மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் வர்த்தகம்
உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி குறைப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு  
முந்த்ரா துறைமுகத்திலிருந்து மாருதி சுஸுகியின் ஏற்றுமதி 10 லட்சத்தை தாண்டியது
எதிர்பார்ப்புகளுக்கிடையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 470 புள்ளிகள் சரிவு