திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு

DIN | Published: 21st April 2019 12:06 AM

மத்திய அரசு, ஜிஎஸ்டி விற்பனை கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் மூன்று நாட்களுக்கு  (ஏப்.23 வரை) நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஜிஎஸ்டி வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வர்த்தகர்கள் மார்ச் மாதத்துக்கான விற்பனை கணக்குகளை ஏப்ரல் 20-ஆம் வரை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த காலக்கெடு மேலும் மூன்று நாட்களுக்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வர்த்தகர்கள் தங்களது மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி விற்பனை கணக்குகளை ஏப்ரல் 23-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஜவுளி ஏற்றுமதியில் மந்த நிலை
நலிவடைந்து வரும் முந்திரி வர்த்தகம்
கசக்கும் கரும்பு விவசாய தொழில்
தங்கம் விலை பவுன் ரூ.28,672
அந்நியச் செலாவணி கையிருப்பில் 100 கோடி டாலர் அதிகரிப்பு