திங்கள்கிழமை 22 ஜூலை 2019

புணே ஆலை 10 லட்சம் கார்களை தயாரித்து சாதனை: ஃபோக்ஸ்வேகன்

DIN | Published: 20th April 2019 12:48 AM


ஜெர்மனைச் சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது புணே ஆலை மூலம் 10 லட்சம் கார்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குர்பிரதாப் போபராய் கூறியதாவது:
புணே ஆலை கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிலையில், ஒன்பது ஆண்டுகளுக்குள் அந்த ஆலை மூலம் 10 லட்சம் கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை 10 லட்சம் கார்கள் என்ற சாதனை எட்டப்பட்டது எங்களது பயணத்தின் முக்கியமான நிகழ்வாகும்.
புணே ஆலையில், போலோ, அமியோ, வென்டோ மற்றும் ஸ்கோடா ராபிட் ஆகிய நான்கு மாடல்கள் ஆண்டுக்கு 20,000 கார்கள் தயாரிக்கப்படுகிறது.
இதைத் தவிர இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்கள் உள்ளூர் தேவையை கருதி, ஆசியா, ஆப்ரிக்கா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலக தரத்திலான கார்களை இந்தியாவில் தயாரிக்க எங்கள் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது என்றார் அவர்.
ஃபோக்ஸ்வேகன் புணே ஆலையில் ஏற்கெனவே நவீன தொழில்நுட்ப மையங்களை அமைத்துள்ளது. இந்த நிலையில், புதிய திட்டங்களுக்கான முதலீட்டின் ஒரு பகுதியாக ரூ.8,000 கோடியை அந்நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

வேலூர்: கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம்
தங்கம் பவுனுக்கு ரூ.144 குறைவு
அந்நியச் செலாவணி கையிருப்பு 111 கோடி டாலர் சரிவு
ஹெச்டிஎஃப்சி வங்கி லாபம் 18% அதிகரிப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிகர லாபம் ரூ.10,104 கோடி