தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 120.5 கோடி

இந்திய தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சென்ற பிப்ரவரியில் 120.54 கோடியை எட்டியுள்ளது.
தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 120.5 கோடி

இந்திய தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சென்ற பிப்ரவரியில் 120.54 கோடியை எட்டியுள்ளது.
இதுகுறித்து தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையமான டிராய் வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: 
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் இணைந்து சென்ற பிப்ரவரி மாதத்தில் நிகர அளவில் 86.39 லட்சம் செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களை புதிதாக இணைத்துக் கொண்டன. அதேசமயம், இதர தொலைத்தொடர்பு நிறுவனங்களிலிருந்து 69.93 லட்சம் பேர் விலகினர். குறிப்பாக, வோடஃபோன் ஐடியா நிறுவனங்களின் மொபைல் இணைப்புகள் அதிக அளவில் பறிபோயுள்ளன.
சென்ற ஜனவரி மாதத்தில் 120.37 கோடியாக இருந்த தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பிப்ரவரியில் 120.54 கோடியை எட்டியுள்ளது.
இந்த துறையில், வயர்லெஸ் இணைப்புகள் மட்டுமே அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதன்படி, ஜனவரியில் 118.19 கோடியாக இருந்த மொபைல் சேவை வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பிப்ரவரியில் 118.36 கோடியாக அதிகரித்துள்ளது.
இதில், ரிலையன்ஸ் ஜியோ நிகர அளவில் 77.93 லட்சம் பேரை இணைத்துக் கொண்டதன் மூலம் அதன் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பிப்ரவரி இறுதி நிலவரப்படி 29.7 கோடியைத் தொட்டுள்ளது. அதேபோன்று, பிஎஸ்என்எல் 9 லட்சம் புதிய வாடிக்கையாளரை இணைத்துக் கொண்டதையடுத்து அந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 11.62 கோடியாக உள்ளது.
வோடாஃபோன் ஐடியாவிலிருந்து 57.87 லட்சம் பேர் வெளியேறியதையடுத்து, அந்நிறுவனத்தின் மொபைல் சேவை மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை பிப்ரவரியில் 40.93 கோடியாக குறைந்து போனது. இந்நிறுவனத்தைத் தொடர்ந்து, டாடா டெலிசர்வீசஸ் 11.47 லட்சம் மொபைல் வாடிக்கையாளரையும், ஏர்டெல் 49,896 வாடிக்கையாளரையும், எம்டிஎன்எல் 4,652 வாடிக்கையாளரையும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 3,611 வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளன.
சாதாரண தரைவழி தொலைபேசியைப் பொருத்தவரையில் பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து மட்டும் ஒரு லட்சம் இணைப்புகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளன. அதேசமயம், இப்பிரிவில் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் முறையே 42,456 மற்றும் 17,563 வாடிக்கையாளர்களை ஈர்த்துக் கொண்டுள்ளன.
பிராட்பேண்ட் சேவை வாடிக்கையாளர் எண்ணிக்கை 54 கோடியிலிருந்து 1.89 சதவீதம் அதிகரித்து 55 கோடியாகி உள்ளது என அந்தப் புள்ளிவிவரத்தில் டிராய் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com