18 ஆகஸ்ட் 2019

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிகர லாபம் ரூ.10,362 கோடி

DIN | Published: 19th April 2019 12:54 AM


முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நான்காம் காலாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவில் நிகர லாபமாக ரூ.10,362 கோடியை ஈட்டியுள்ளது. கடந்த 2017-18 நிதியாண்டின்  இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.9,438 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 9.8 சதவீதம் அதிகமாகும்.
2018-19 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் வருவாய் 19.4 சதவீதம் அதிகரித்து ரூ.1,54,110 கோடியாக இருந்தது. மூன்றாவது காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.1,70,709 கோடியுடன் ஒப்பிடும்போது இது 9.7 சதவீதம் குறைவாகும்.
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மூலமாக கிடைக்கும் லாப வரம்பு குறைந்துள்ள நிலையிலும், சில்லறை வர்த்தகத்தின் மூலமாக கிடைக்கும் வருவாய் சிறப்பான அளவில் மேம்பட்டுள்ளது. இது தவிர, ஜியோ மொபைல் போன் சேவையில் 2.66 கோடி புதிய வாடிக்கையாளர்கள் இணைந்ததும் நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்க மிகப்பெரும் உதவியாக அமைந்தது.
கடந்த 2018-19 முழு நிதியாண்டில் ரூ.6,22,809 கோடி வருவாயும்  ரூ.39,588 கோடி நிகர லாபமும்  ஈட்டி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, ரிலையன்ஸ் ரீடெயில் வர்த்தகம் ரூ.1,00,000 கோடி என்ற மைல்கல்லைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. மேலும், ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் 30 கோடியைத் தாண்டியுள்ளது.
கடந்த 2018 மார்ச் நிலவரப்படி நிறுவனத்தின் கடன் ரூ.2,18,763 கோடியாக இருந்தது. இது, அவ்வாண்டு டிசம்பர் இறுதியில் ரூ.2,74,381 கோடியாக அதிகரித்தது. இந்தநிலையில், நடப்பாண்டு மார்ச் 31 நிலவரப்படி நிறுவனத்தின் கடன் ரூ.2,87,505 கோடியாக உள்ளது என வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.  
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஐடிபிஐ வங்கி இழப்பு ரூ.3,800 கோடியாக அதிகரிப்பு
அந்நியச் செலாவணி கையிருப்பில் புதிய உச்சம்
புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி உஜ்ஜீவன் வங்கி செபிக்கு விண்ணப்பம்
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் நிகர லாபம் 212 சதவீதம் உயர்வு
தங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு