புதன்கிழமை 21 ஆகஸ்ட் 2019

நடுத்தரவகை சொகுசுகாரை இணைந்து மேம்படுத்த மஹிந்திரா-ஃபோர்டு நிறுவனங்கள் உடன்படிக்கை

DIN | Published: 19th April 2019 12:54 AM


நடுத்தர வகையைச் சேர்ந்த சொகுசு காரை இணைந்து மேம்படுத்தும் வகையில் மஹிந்திரா & மஹிந்திரா- ஃபோர்டு நிறுவனங்கள் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
இதுகுறித்து மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா கூறியுள்ளதாவது:
ஃபோர்டு நிறுவனத்துடன் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் மஹிந்திரா கூட்டு கொண்டுள்ளது. அந்த வகையில், தற்போது இரு நிறுவனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள இந்த புதிய ஒப்பந்தம் எங்களது கூட்டுறவின் மேலும் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமான அம்சமாகும்.  நடுத்தர வகை சொகுசு காரை  (எஸ்யுவி) மேம்படுத்தும் பணியில், பல பிரிவுகளில் இணைந்து செயல்பட வாய்ப்பிருப்பது கண்டறியப்பட்டு இந்த புதிய உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், தயாரிப்பு மேம்பாட்டு செலவினங்கள் வெகுவாக குறைவதுடன், பொருளாதார ரீதியில் இரு நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் உடன்படிக்கை இதுவாகும். இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம், மஹிந்திரா-ஃபோர்டு இணைந்து மிக உயரிய உன்னதமான தயாரிப்பை இந்தியா மட்டுமின்றி வளர்ந்து வரும் நாடுகளின் சந்தைகளுக்கும் வழங்க முடியும் என்றார் அவர்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

டி.வி.எஸ். புதிய டயர் அறிமுகம்
இந்தியச் சந்தையில் சாம்சங்கின் நோட் 10 
ஹுண்டாயின் கிராண்ட் ஐ10 நியோஸ் அறிமுகம்
சென்னையில் தங்கம் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து வர்த்தகம்
ஏ.டி.எம் கார்டுகளை ரத்து செய்ய திட்டம்: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு