செவ்வாய்க்கிழமை 20 ஆகஸ்ட் 2019

சென்செக்ஸ் 135 புள்ளிகள் இழப்பு

DIN | Published: 19th April 2019 12:53 AM


லாப நோக்கு விற்பனையை அடுத்து இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. இதையடுத்து, சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டெண்கள் வரலாற்று உச்சத்திலிருந்து சரிந்தன.
பொதுத் தேர்தல் மற்றும் மேலும் சில காரணங்களால் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனர். ஜெட் ஏர்வேஸ் சேவையை நிறுத்தியுள்ளதன் எதிரொலியாக வங்கிகள், நிதி நிறுவனங்களின் பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வியாழக்கிழமை  நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 135 புள்ளிகள் சரிந்து 39,140 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தத்தில் நிஃப்டி 34 புள்ளிகள் குறைந்து 11,752 புள்ளிகளில் நிலைபெற்றது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பொருளாதார வளர்ச்சிக்கே முன்னுரிமை: ரிசர்வ் வங்கி ஆளுநர்
ஹீரோ எலக்ட்ரிக்ஸின் புதிய மின் ஸ்கூட்டர்கள் அறிமுகம்
ஐக்கியா: மும்பையில் ஆன்லைன் வர்த்தகம் தொடக்கம்
பொருளாதார மந்தநிலை ஏன்?
ஐடிபிஐ வங்கி இழப்பு ரூ.3,800 கோடியாக அதிகரிப்பு