வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

மார்ச் மாத வாகன விற்பனையில் மந்த நிலை

DIN | Published: 02nd April 2019 12:51 AM


 கடந்த மார்ச் மாதத்தில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் மோட்டார் வாகன விற்பனை மந்த நிலையை கண்டுள்ளது. இதற்கு, தேர்தலை முன்னிட்டு நுகர்வோரின் செலவினம் வெகுவாக குறைந்துள்ளது மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தற்காலிக தொய்வு ஆகியவையே காரணம்.  இருப்பினும், தேர்தலுக்கு பின்பு மோட்டார் வாகன விற்பனை சூடுபிடிக்கும் என மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. 

மாருதி சுஸுகி  

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியாவின் மார்ச் மாத விற்பனை 1.6 சதவீதம் சரிந்து 1,58,076 ஆக இருந்தது. 
கடந்தாண்டு இதே கால அளவில் விற்பனை 1,60,598 ஆக இருந்தது. 
உள்நாட்டு விற்பனை 1,48,582-லிருந்து 1,47,613-ஆக குறைந்தது.
ஆல்டோ உள்ளிட்ட சிறிய வகை கார்களின் விற்பனை கடந்தாண்டு மார்ச் மாதத்தில் 37,511-ஆக இருந்த நிலையில், நடப்பாண்டில் இதே கால அளவில் 55.1 சதவீதம் வீழ்ச்சியடைந்து 16,826-ஆனது. 
அதேசமயம், ஸ்விஃப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனோ, டிசையர் விற்பனை 19.8 சதவீதம் உயர்ந்து 68,885-லிருந்து 82,532-ஆனது.
இருப்பினும் கார்கள் ஏற்றுமதி, 12,016 என்ற எண்ணிக்கையிலிருந்து 12.9 சதவீதம் சரிந்து 10,463-ஆக இருந்தது.
கடந்த 2018-19 நிதியாண்டில் கார்கள் விற்பனை 18,62,449-ஆக இருந்தது. 2017-18 நிதியாண்டில் விற்பனையான17,79,574 கார்களுடன் ஒப்பிடுகையில் இது 4.7 சதவீதம் அதிகம் என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. 

டொயோட்டா
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் மார்ச் மாதத்தில் 13,662 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
இது, கடந்தாண்டு விற்பனையான 13,537 எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் சற்றே அதிகம்.
உள்நாட்டில் வாகன விற்பனை 12,539 என்ற எண்ணிக்கையிலிருந்து 2 சதவீதம் மட்டுமே உயர்ந்து 12,818-ஆனது.
கடந்த 2018-19 நிதியாண்டில் வாகன விற்பனை 7 சதவீதம் அதிகரித்து 1,50,525-ஆக இருந்தது. 
நடப்பாண்டு ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட கேம்ரி ஹைபிரிட் எலக்டிரிக் கார்களுக்கான முன்பதி ஏற்கெனவே 500ஐ தாண்டியுள்ளது என டொயோட்டா தெரிவித்துள்ளது. 

மஹிந்திரா
மஹிந்திரா &  மஹிந்திரா நிறுவனம் மார்ச் மாதத்தில் 62,952 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் விற்பனையான 62,076 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 1 சதவீதம் மட்டுமே அதிகமாகும். உள்நாட்டில் விற்பனை 58,652-லிருந்து சற்று அதிகரித்து 59,012-ஆக இருந்தது.
பயணிகள் வாகன விற்பனை 26,555-லிருந்து 4 சதவீதம் அதிகரித்து 27,646-ஆக காணப்பட்டது. அதேசமயம், வர்த்தக வாகனங்களின் விற்பனை 25,495-லிருந்து 4 சதவீதம் சரிவடைந்து 24,423-ஆக இருந்தது.
வாகன ஏற்றுமதி 3,424-லிருந்து 15 சதவீதம் ஏற்றம் கண்டு 3,940-ஆக இருந்தது. 
மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த 2018-19 நிதியாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன விற்பனை 11 சதவீதம் அதிகரித்து 6,08,596-ஆக இருந்தது என மஹிந்திரா அண்டு மஹிந்திரா தெரிவித்துள்ளது.

அசோக் லேலண்ட் 
ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகன விற்பனை மார்ச் மாதத்தில் 21,535 ஆக இருந்தது. கடந்தாண்டில் இதே கால அளவில் விற்பனை செய்யப்பட்ட 22,543 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் சரிவாகும்.
கனரக வர்த்தக வாகனங்கள் விற்பனை 17,057 என்ற எண்ணிக்கையிலிருந்து 6 சதவீதம் குறைந்து 16,034-ஆனது. அதேசமயம்,  இலகு ரக வர்த்தக வாகனங்கள் விற்பனை 5,396-லிருந்து 2 சதவீதம் வளர்ச்சி கண்டு 5,501 ஆனது என அசோக் லேலண்ட் மும்பை பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளது. 

எஸ்கார்ட்ஸ் டிராக்டர்
எஸ்கார்ட்ஸ் டிராக்டர் விற்பனை மார்ச் மாதத்தில் 1 சதவீதம் வளர்ச்சி கண்டு 11,905-ஆக இருந்தது. கடந்தாண்டின் இதே கால அளவில் டிராக்டர் விற்பனை 11,790-ஆக காணப்பட்டது.
உள்நாட்டில் டிராக்டர் விற்பனை 1.1 சதவீதம் குறைந்து 11,431-ஆக இருந்தது. ஏற்றுமதி 233 என்ற எண்ணிக்கையிலிருந்து அதிகரித்து 474-ஆக காணப்பட்டது.
மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த டிராக்டர் விற்பனை 80,417-லிருந்து 19.9 சதவீதம் வளர்ச்சி கண்டு 96,412-ஆக இருந்தது என எஸ்கார்ட்ஸ் நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஹூண்டாய் நிறுவனத்துக்கு அமெரிக்கா 47 மில்லியன் டாலர்கள் அபராதம்
வரிச்சலுகை அறிவிப்பு எதிரொலி: மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் வர்த்தகம்
உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி குறைப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு  
முந்த்ரா துறைமுகத்திலிருந்து மாருதி சுஸுகியின் ஏற்றுமதி 10 லட்சத்தை தாண்டியது
எதிர்பார்ப்புகளுக்கிடையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்