வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

புதிய மாடல் பல்சர் அறிமுகம்

DIN | Published: 30th November 2018 12:49 AM

புதிய மாடல் பல்சரை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மோட்டர்சைக்கிள் பிரிவின் தலைவர் எரிக் வாஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது: முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதிய தோற்றத்துடன் கூடிய பல்சர் 150 நியான்-2019 என்ற மாடல் சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

100 சிசி மற்றும் 110 சிசி-க்கு மேல் மோட்டார்சைக்கிள் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இனி இந்த நியான் பல்சர் புதிய மாடல் முதல் தேர்வாக இருக்கும்.

14பிஎஸ் திறனில் வெளிவரும் இந்த மாடலின் விலை ரூ.64,998-ஆக (எக்ஸ்-ஷோரூம் தில்லி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More from the section

பங்குச் சந்தையில் தொடர் சரிவு
தொழில்முனைவுக்கான விதிமுறைகள் தளர்வு புதிய தொழில் முதலீடுகளை ஊக்குவிக்கும்
ஓலாவில் சச்சின் பன்சால் ரூ.650 கோடி முதலீடு
ரூ.2,500 கோடி மதிப்பிலான பங்குகளை விற்க ரிலையன்ஸ் பவர் நிறுவனம் முடிவு
பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 311 புள்ளிகள் சரிவு